Sardar 2 Accident: 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஸ்டண்ட் நடிகர் மரணம்! சர்தார் 2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்
சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஸ்டண்ட் நடிகர் ஏழுமலை விபத்துக்குள்ளாகி உயிரழந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சர்தார் 2 படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஸ்டண்ட் நடிகர் மரணம்
கடந்த 2022இல் கார்த்தி நடிப்பில் வெளியான படம் சர்தார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சர்தார் 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
கடந்த வாரம் படம் பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஜூலை 15 முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தியின் தந்தையும், நடிகருமான சிவக்குமார் பங்கேற்றார். சர்தார் 2 படத்தில் முதலில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.