Cook with comali: இந்த சண்டையை ஆரம்பித்ததே இவர்தான்! உண்மையை போட்டு உடைத்த குரேஷி
Sep 19, 2024, 12:33 PM IST
Cook with comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும், தனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் எனவும் பதிவிட்டு சோசியல் மீடியாவில் மணிமேகலை பூகம்பத்தை கிளப்பிய நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரேஷி இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 5 தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் ஏற்பட்ட மோதல் பூதாகரமாகியது. இதனால் சோசியல் மீடியாவில் பல கருத்துகள் உலா வந்த நிலையில், பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் சண்டை ஏற்பட்ட நாளில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து குரேஷி அவரது குரேஷி வைப்ஸ் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா- மணிமேகலைக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து தனிப்பட்ட கருத்துகள் இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக இருப்பதால் அங்கு என்ன நடந்தது என்பதை மக்களிடம் பகிர்வதாக கூறினார்.
பாசிட்டிவ்காக செய்தது இப்படி மாறிடிச்சு
சோசியல் மீடியாவில் இச்சம்பவம் குறித்து எல்லை மீறிய கருத்துகள் உலாவருகிறது. மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தபோது, அவருடைய விருப்பத்திற்கு மரியாதை அளித்து எதிர்கால பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு அவர் ரிப்ளை அளிக்கவில்லை. இதற்கிடையில் தன்னை பலரும் பிரியங்காவின் கூட்டாளி என திட்டி கமெண்ட் செய்தனர். நான் ஒரு விஷயத்தை பாசிட்டிவ்வாக மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் அதுவே நெகட்டிவ்வாக மாறியது.
நான் யாரையும் சார்ந்து பேசவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக நான் யாரையும் சார்ந்து பேசவில்லை. மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் சண்டை நடந்த அன்று, நிகழ்ச்சியிலிருந்து திவ்யா துரைசாமி எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்தும் பேசினார். அப்போது, பிரியங்கா இந்த சீசசன் முழுவதும் தனக்கு சப்போர்ட்டாக இருந்தார் என குறிப்பிட்டார். அப்போது பிரியங்கா, திவ்யா துரைசாமி பற்றி நான் கொஞ்சம் பேசலாமா என ஆங்கர்களிடம் கேட்டார். தர்ஷன் அதற்கு அனுமதி அளித்ததால், பிரியங்கா பேசினார்.
அப்போது, கேமரா ரோலிங்கில் இருக்கும் போதே, மணிமேகலை பிரியங்காவை பேச வேண்டாம் என மறுத்தார். ஏற்கனவே நீங்கள் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்வதாக பலரும் சொல்கிறார்கள். எனவே நீங்கள் பேச வேண்டாம் என மறுத்தார். இதனால் ஷாக் ஆன பிரியங்கா செட்டை விட்டு வெளியேறினார்.
மறுக்கப்பட்ட உரிமை
பின் அடுத்த வார சூட்டிங்கின் போது, பிரியங்கா தான் பேசும்போது உரிமை மறுக்கப்பட்டதாகவும் தான் ஆங்கராக பேச விரும்பவில்லை. தன்னுடன் இந்த சீசனில் பயணித்த நபர் குறித்த கருத்துகளை மட்டுமே பகிர விரும்பியதாகவும் கூறினார். ஆனால், இவரை பேசவைத்துவிட்டு, பின் எடிட்டிங்கில் இவற்றை நீக்கியிருந்தால் கூட பரவாயில்லை.
பிரியங்காவும் மணிமேகலையும் நீண்ட நாட்களாகவே நண்பர்கள். அவர்கள் ஒரே நிகழ்ச்சியில் வேலை செய்யும்போது, தனியாக இருவரும் பேசியிருக்கலாம். அதற்கு மாறாக சுயமரியாதை இருக்கு, பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை எனக் கூறி மணிமேகலை கேரவனுக்கு சென்றார். இதனால் சூட்டிங்கும் தாமதமானது.
கண்டென்டுக்காகவே சில விஷயம் நடக்கும்
ஒரே குடும்பமாக எல்லாரும் வேலை செய்யும்போது சில முரண்பாடு வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்தாமல் செல்ல வேண்டும். இதற்கு முன்பாக கண்டென்டுக்காகவே சில விஷயங்கள் குக் வித் கோமாளியில் நடக்கும். சுஜிதா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் மணிமேகலையை ஆங்கரா என கிண்டல் செய்துள்ளனர். இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாத மணிமேகலை, பிரியங்காவிடமும் இதேபோன்று பேசியிருந்தால் சுமூகமாக முடிந்திருக்கும். சின்ன மனக்கசப்பை இவ்வளவு தூரம் எடுத்து செல்ல வேண்டாம் என நினைத்து தான் பிரியங்கா இதற்கெல்லாம் பதிலளிக்கவில்லையா எனத் தெரியவில்லை என்றார்.
நான் சொம்பு தூக்கவில்லை
மேலும், நான் என்னுடைய வேலையை செய்கிறேன். யாருக்கும் சொம்பு தூக்கவில்லை. சோசியல் மீடியாவில் பலரும் என் கூடவே இருந்து பார்த்தது போல் பதிவு செய்கின்றனர். இதனால், தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது. இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது நல்லதல்ல எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்