Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!-bayilvan ranganthan says about issue between manimegalai vs priyanka - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!

Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!

Aarthi Balaji HT Tamil
Sep 19, 2024 08:41 AM IST

Bayilvan: பிரியங்கா, இதே விஜய் டிவியில், நீங்க ப்ரொட்யூசரை லவ் என்று சொன்னவுடன் கட் என சொன்ன கதை இருக்கிறது என்று பயில்வான் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!
Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!

அந்த வகையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அவர் கூறுகையில், “ தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் இருக்கிறது. அதனால் எல்லாம் நாடகம் தான். யாரை தான் பிரியங்கா கலாய்க்கவில்லை. நான் 4 ஷோ சென்று இருக்கிறேன். என்னையும் அவர் கலாய்த்து இருக்கிறார். நான் ஒன்று சொல்லட்டுமா பிரியங்கா, இதே விஜய் டிவியில், நீங்க ப்ரொட்யூசரை லவ் என்று சொன்னவுடன் கட் என சொன்ன கதை இருக்கிறது.

என்னை நீ கலாய்க்க வேண்டாம்

அதற்குப் பிறகு உஷாராகப் பேச ஆரம்பித்தார். இது எல்லாமே வியாபார தந்திரம் தான். குக் வித் கோமாளி என்றால் என்ன, எங்காவது கோமாளியைச் சமைக்க விடுவார்களா? புதியதாக வந்து இருக்கும் செப், அவரின் பெயரை சொல்ல கூட நான் விரும்பவில்லை. அவரிடம் என்ன பேசினார் என்று தெரியவில்லை. என்னை நீ கலாய்க்க வேண்டாம் என்று பிரியங்காவைப் பார்த்து அவரே சொல்லி இருக்கிறார். இதை யாராவது பார்த்து இருக்கிறீர்களா? நான் பார்த்தேன். எனக்கு வீடியோ வந்தது.

பிரியங்கா பல முறை தனக்குச் சமைக்கத் தெரியாது என சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் அவரை எதனால் நிகழ்ச்சி உள்ளே நுழைக்க வேண்டும்? வாய் வைத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா “ என்றார். 

முன்னதாக, பிரியங்கா மணிமேகலை விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியையும் பார்க்கலாம்.

இது குறித்து அவர் பேசும் போது," பிரியங்கா மணிமேகலை விவகாரத்தை பார்க்கும் போது, வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

 உதாரணம்

‘ஆடுகளம்’ திரைப்படத்தில் குரு சிஷ்யனுக்கு இடையிலான தொழில் போட்டியும், அதனால் ஏற்படும் வன்மமும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். குருவானவர் தன்னுடைய சிஷ்யன் தன்னை விட அதிகமாக வளர்கிறான் என்றால் ஒன்று, அவரை வெட்டி விட்டு, தான் வளர வேண்டும் என்று நினைப்பார். இல்லை, அவரை தன்னுடைய வாரிசு என்று நினைத்து, அவனை வளர்த்து விட நினைப்பார். அதற்கு உதாரணம் தொகுப்பாளர் பிரியா. அவர் சக தொகுப்பாளர்களுக்கு போதுமான ஸ்பேசை கொடுத்து, அவர்கள் வளர பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விஜய் டிவியில் எப்போது பிரதீப் என்பவரின் ஆதிக்கம் அதிகமானதோ அப்போதிலிருந்து தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவர் அவருக்கென்று ஒரு குரூப்பை சேனலுக்குள் செட் செய்ய முயற்சிகளை எடுத்தார். அவர்தான் டிடி உட்பட தேவையில்லாத நபர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து வளர்த்து விட்டார் “ என்றார்.

பொறுப்பு துறப்பு

இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

நன்றி: Public Wing

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.