தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை..குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறியது ஏன்?

Cook With Comali: ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை..குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறியது ஏன்?

Aarthi Balaji HT Tamil
Jun 15, 2024 10:43 AM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பேசிய பலவற்றை எபிசோடில் எடிட் செய்து கட் செய்கிறார்கள். அதுபோல அடுத்து சூட்டிங் என்னை கூப்பிடுவார்கள் என காத்திருந்தேன். ஆனால் அழைப்பு வரவே இல்லை என நாஞ்சில் விஜயன் தெரிவித்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறியது ஏன்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் வெளியேறியது ஏன்?

Cook With Comali: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் நடுவர்களாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ் பட்டும்.

கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும், புது நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி, வெங்கடேஷ் பட் அறிக்கை வெளியிட்டார். கூடவே அந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் வெளியேறினார்.

கோவிட் காலத்தில் தொடங்கிய நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி 2020 ஆம் ஆண்டு கோவிட்- 19 லாக் டவுனுக்கு மத்தியில் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட போது பிரபலமடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாவது சீசன் அடிவானத்தில் உள்ளது. புதிய சீசனுக்கு முன்னதாக செஃப் வெங்கடேஷ் பட், ஒரு புதிய கருத்தாக்கத்துடன் திரும்பி வருவதை குறிக்கும் வகையில், ஓய்வு எடுப்பதற்காக நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

வெளியேறிய நாஞ்சில் விஜயன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியவுடன் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் , வெளியேறினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறேன். எனக்கும், விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இதன் பிறகு பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் வர மாட்டேன். எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் உண்மையாக அவர் எதனால் வெளியேறி சென்றார் என்ற தகவல் மட்டும் தெரியாமல் இருந்தது.

இது தான் காரணம்

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தான் எதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என தெரியவந்து உள்ளது.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் விளக்கம் கொடுத்த அவர், ”நான் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளேன். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரின் வாழ்க்கை மாறி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் ஷகிலாவை பலரும் அம்மா என்று அழைத்தார்கள். திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் வேறு ஒரு பின்பத்தில் மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் கிடைத்தனர்.

பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாக இருக்கிறார்கள். நானும் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அதேபோல ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என ஆர்வத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை

ஆனால் நிகழ்ச்சியில் நான் பேசிய பலவற்றை எபிசோடில் எடிட் செய்து கட் செய்கிறார்கள். அதுபோல அடுத்து சூட்டிங் என்னை கூப்பிடுவார்கள் என காத்திருந்தேன். ஆனால் அழைப்பு வரவே இல்லை. நானும் பலமுறை போன் செய்து பார்த்தேன். ஆனாலும் எனக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் கோபமும், வெறுப்பும் ஏற்பட தொடங்கிவிட்டது. நாம் என்ன அவ்வளவு மோசமாக நடிக்கிறோமா? இல்லை கன்டென்ட் கொடுக்கவில்லையா? என தெரிந்தது. அதனால் நிகழ்ச்சியில் தொடரவில்லை “ என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.