தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kondraal Paavam Review: ‘கொன்றால் பாவம்’ திரைக்கதையை தின்றால் போகுமா?

Kondraal Paavam Review: ‘கொன்றால் பாவம்’ திரைக்கதையை தின்றால் போகுமா?

HT Tamil Desk HT Tamil

Mar 07, 2023, 08:53 PM IST

Kondraal Paavam Movie Review: ‘கொன்றால் பாவம், தின்றால் போகும்’ என்பது தான் கதையின் கரு. கொன்றார்களா? தின்றார்களா? என்பதை சஸ்பென்ஸாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
Kondraal Paavam Movie Review: ‘கொன்றால் பாவம், தின்றால் போகும்’ என்பது தான் கதையின் கரு. கொன்றார்களா? தின்றார்களா? என்பதை சஸ்பென்ஸாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

Kondraal Paavam Movie Review: ‘கொன்றால் பாவம், தின்றால் போகும்’ என்பது தான் கதையின் கரு. கொன்றார்களா? தின்றார்களா? என்பதை சஸ்பென்ஸாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

மார்ச் 10 ம் தேதி வெளியாகிறது ‘கொன்றால் பாவம்‘ திரைப்படம். முன்னதாக செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி, சற்று முன் சென்னையில் திரையிடப்பட்டது. படம் முடிந்த கையோடு, இந்துஸ்தான் டைம்ஸ் சுடச்சுட வழங்கும் விமர்சனம் இதோ:

மல்லிகாவின் அப்பாவுக்கு உடல்நலம் குன்றி விட, நன்றாக வாழ்ந்து வந்த குடும்பம் கடனில் தள்ளப்படுகிறது. வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு நாடோடியாய் திரியும் அர்ஜூனன் வருகிறான். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருக்கும் பணம் நகைகளை காட்ட, அதற்கு ஆசைப்பட்டு கஷ்டத்தில் இருந்து மீள நினைக்கும் அந்த குடும்பம் அவனையே கொல்ல முடிவெடுக்கிறது. 

இறுதியில் அவன் கொல்ல பட்டானா? நகைகள் என்ன ஆனது? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளே கொன்றால் பாவம் படத்தின் கதை!

பலம்: மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வரலட்சுமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். அவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் சார்லி, அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரியும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

பலவீனம்: அரத பழைய கதை, இரண்டாம் பாதி ஓகே என்றாலும், படம் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.

இசை: சாம்.எஸ்.,யின் பின்னணி இசை ஓகே

தயாள் பத்மநாபனின் இயக்கத்தில் த்ரில்லர் ஆர்வம் தெரிகிறது. அதே நேரத்தில் இன்னும் கூட பார்ப்பவர்களை கனெக்ட் செய்திருக்கலாம் என்கிற எண்ணம் வராமல் இல்லை. 

வரலட்சுமி, நெகட்டிவ் ரோல்களில் இதற்கு என்ன செய்தாரோ, அப்படியே இதிலும் காட்சி தருகிறார். சமீபத்தில் வீரசிம்ஹாரெட்டி பார்த்ததால், இந்த தாக்கம் இருந்திருக்கலாம். அர்ஜூனாக வரும் சந்தோஷ் பிரதாப்பிற்கு இந்த படம் ஹீரோ அந்தஸ்தை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

‘கொன்றால் பாவம், தின்றால் போகும்’ என்பது தான் கதையின் கரு. கொன்றார்களா? தின்றார்களா? என்பதை சஸ்பென்ஸாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஒரு குறுகிய வட்டத்திற்கு கதை வலம் வருவதால், அதுவே ஒரு கட்டத்தில் அயர்ச்சியாகிறது. மற்றபடி, எப்படி பார்த்தாலும், ‘பாவம் பாவம் தான்’.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.