சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக்.. சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Nov 15, 2024, 12:33 PM IST
சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக், ரேவதி கழுத்தில் விழும் செயின் என அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் ஆட இருந்த நபர் வராமல் போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிவனாண்டியை ஓடவிடும் கார்த்திக்
சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 பவுன் செயினை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறாள். இதைத்தொடர்ந்து கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறான். கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்த ஊர் மக்கள் அனைவரும்,ஊர் மானத்தை காப்பாற்றி விட்டான் என்று கொண்டாடுகின்றனர்.
இதையடுத்து சாமுண்டேஸ்வரி, புவனேஸ்வரியை கூப்பிட்டு பரிசை கொடுக்க அவன் நான் இந்த பரிசுக்காக இந்த போட்டியில் கலந்துக்கல என பதிலடி கொடுக்கிறான்.
ரேவதி கழுத்தில் விழும் செயின்
நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என கேட்டதால் தான் கலந்துக்கிட்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்லி குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச, அப்போது அந்த வழியாக வந்த நாயகி ரேவதி கழுத்தில் விழுகிறது. இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பி வருகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கோவில் திருவிழா நடக்க வேண்டும் என்றால், ராஜசேதுபதியின் மகன் வரவேண்டும் என்கிற நிலை இருப்பதால் கார்த்திக், அத்தை, மாமாவை இந்த வீட்டுக்கு நிச்சயம் கூட்டிக்கொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு, அத்தையின் ஊருக்கு போகிறான்.
ஊரில் ஒருவனுக்கு உதவி செய்ய அவன் நண்பனாகிவிட, கார்த்திக் இந்த ஊரில் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்க, அந்த நண்பனும் வீடு வாடகைக்கு பிடித்து கொடுக்கிறான். இதன் பின்னர் இருவரும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு செல்கின்றனர்.
அப்போது சாமுண்டேஸ்வரிக்கு அனைவரும் மரியாதை கொடுப்பதை பார்த்துவிட்டு, கார்த்திக் எதுவுமே தெரியாதது போல, சாமுண்டேஸ்வரி பற்றி விசாரிக்கிறான். அந்த நண்பன் இவங்க தான் இந்த ஊரிலேயே பெரிய ஆள், இவங்களுக்கு நான்கு பெண்கள், இவங்களுக்கு ஆம்பளைங்களே பிடிக்காது என்று சொல்கிறான்.
சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் ஆட இருந்த நபர் வராமல் போக, அவர் திடுக்கிட்டு நிற்பது போல் முடிந்த நிலையில், இன்றையை எபிசோடில் பரபரப்பான சிலம்பாட்ட காட்சிகள் இடம்பிடிக்க இருக்கிறது.
கார்த்திகை தீபம் புதிய சீசன்
கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன், கார்த்திகை தீபம் முதல் சீசன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து புதிய கதைக்களத்துடன் புதிய சீசன் தற்போது ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ஒரு ஊரில் பெரிய அரண்மனை வீடு காட்டப்படுகிறது. அந்த ஊரில் காலம் காலமாக கோயில் ஒன்று பூட்டப்பட்ட இருப்பதால், மழை இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதனால் கோயிலை திறக்க வேண்டும் என ஊரின் பெரிய மனுஷனான ராஜா சேதுபதியிடம் முறையிட ஊர் மக்கள் ஒன்று கூடுகின்றனர்.
ஆனால் ராஜசேதுபதி பூஜை அறையில் சாமியை வணங்கி கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி, பரமேஸ்வரியிடம் ஒரு பெண் ஒருவர் பெரிய சம்பட்டியை எடுத்து கோயில் பூட்டை உடைத்து, கோயிலை திறக்க, கோயிலுக்குள் இருந்து ஒளி வருவது போல கனவு கண்டதாக சொல்ல, இறுதியாக கோயிலை திறக்க முடிவுசெய்யப்படுகிறது.
பிறகு எல்லோரும் கோயிலை திறப்பதற்காக கோயில் அருகே ஒன்று கூட, விருமன் என்பவன் நீங்கள் விருப்பப்பட்டால் கோயிலை திறப்பதற்கும், தேவையில்லை என்றால் மூடுவதற்கும் கோயில் என்ன உங்க வீட்டுக்கு பீரோவா என கேள்வி எழுப்பி பிரச்சினை செய்கிறான். தொடர்ந்து, உங்க பையன் வந்தா தான் கோயிலை முறையா திறக்க முடியும் என்று சாடுகிறான். இதனால் ராஜசேதுபதி கோயிலை திறக்க முடியாமல் திரும்பிச்செல்ல, ஒருவன் பெரிய சம்பட்டி எடுத்து பூட்டை அடித்து உடைத்து கோயிலை திறக்கிறான். யார் என்று பார்த்தால் அது கார்த்திக் என்று தெரிய வருகிறது.
அதன் பின்னர் அடுத்தடுத்த சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் புதிய சீசன் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
டாபிக்ஸ்