சாடி வரும் சாமுண்டேஸ்வரி.. முக்காடு போடப்பட்ட மூத்த மருமகன்! கட்டையை கொடுக்கும் கார்த்திக்-கார்த்திகைதீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியலில், இன்று நடக்கப்போகும் நிகழ்வுகள் என்னென்ன என்பதினை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கார்த்திக்கு வில்லியாக உருவெடுக்க போகும் சாமுண்டேஸ்வரி.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கோயிலை திறந்து, சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும், ஊரில் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்
அதாவது, கார்த்திக் கோயிலை திறந்ததும், சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும், மழை கொட்டத்தொடங்கியதும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அடுத்து தாத்தா ராஜசேதுபதி சாமுண்டீஸ்வரியை அறிமுகம் படுத்தும் வண்ணம், அவளுக்கு ஆம்பளைங்க என்றாலே பிடிக்காது என்று சொல்கிறார்.
இதற்கிடையே, கார்த்திக் வீட்டிற்கு வர அங்கு அருண் மற்றும் ஆனந்த் காத்திருக்கின்றனர். இதை பார்த்தும் கார்த்திக் ஆச்சரியப்படுகிறான். அடுத்ததாக சாமுண்டீஸ்வரியின் குடும்பம் காட்டப்படுகிறது. ராஜராஜன் சாதாரணமாக ஆட்டோவில் வந்து இறங்க, சாமுண்டீஸ்வரி மகள்களுடன் ஆடம்பரமாக வந்து இறங்குகிறாள். இதை வைத்து ராஜராஜனுக்கும் அந்த வீட்டின் மூத்த மருமகனுக்கும் மரியாதை இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது.
அதை தொடர்ந்து சீரியலின் நாயகியின் திருவிழாவில் இருப்பது போல் அறிமுக காட்சிகள் இடம்பெறுகின்றன. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஸிஈ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
ராஜசேதுபதி பூஜை அறையில் சாமியை வணங்கி கொண்டிருந்தான். அப்போது பாட்டி, பரமேஸ்வரியிடம் ஒரு பெண் ஒருவர் பெரிய சம்பட்டியை எடுத்து கோயில் பூட்டை உடைத்து, கோயிலை திறக்க, கோயிலுக்குள் இருந்து ஒளி வருவது போல கனவு கண்டதாக சொல்ல, இறுதியாக கோயிலை திறக்க முடிவுசெய்யப்பட்டது.
பிறகு எல்லோரும் கோயிலை திறப்பதற்காக கோயில் அருகே ஒன்று கூட, விருமன் என்பவன் நீங்கள் விருப்பப்பட்டால் கோயிலை திறப்பதற்கும், தேவையில்லை என்றால் மூடுவதற்கும், கோயில் என்ன உங்க வீட்டுக்கு பீரோவா என கேள்வி எழுப்பி பிரச்சினை செய்தான். தொடர்ந்து, உங்க பையன் வந்தா தான் கோயிலை முறையா திறக்க முடியும் என்று சாடினான். இதனால் ராஜசேதுபதி கோயிலை திறக்க முடியாமல் திரும்பிச்செல்ல, இடையே வந்த ஒருவன் பெரிய சம்பட்டி எடுத்து பூட்டை அடித்து உடைத்து கோயிலை திற்ந்தான். யார் என்று பார்த்தால் அது கார்த்திக் என்று தெரிய வந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்