சிறந்த சின்னத்திரை நடிகர்... கலங்கிய கார்த்திக்.. அதிர்ந்த அரங்கம்.. ஜீ தமிழ் குடும்ப விருதுகள் - முழு பட்டியல்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற குடும்ப விருதுகளில் சிறந்த சின்னத்திரை நடிகருக்கான விருது கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரமாண்டமாக நடந்து முடிந்த ஜீ குடும்ப விருதுகள் 2024.. விருதுகளை வென்றது யார் யார்? எப்போது ஒளிப்பரப்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே பார்க்கலாம்.
ஜீ குடும்ப விருதுகள்
தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்தச் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், சரிகமப போன்ற ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில், ஜீ தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஜீ குடும்ப விருதுகள் என்ற பெயரில் விருது விழாவை நடத்தி வருகிறது.
பேவரைட் நடிகர் - கார்த்திக் ராஜ் ( கார்த்திகை தீபம் )
அந்த வகையில் இந்த வருடத்திற்கான குடும்ப விருதுகள் விழா ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து வரும் அக்டோபர் 26 மற்றும் 27 என இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகி உள்ளன. மக்களின் ஓட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார்? அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
1. பேவரைட் நடிகர் - கார்த்திக் ராஜ் ( கார்த்திகை தீபம் )
2. பேவரைட் நடிகை - வைஷ்ணவி மற்றும் ரேஷ்மா ( வீரா & நெஞ்சத்தை கிள்ளாதே )
3. பேவரைட் சீரியல் - கார்த்திகை தீபம்
4. பேவரைட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி - கார்த்திக் ராஜ் & ஹர்திகா ( கார்த்திகை தீபம் )
5. பேவரைட் வில்லி - சுபிக்ஷா ( வீரா )
6. சிறந்த நடிகர் - செந்தில் ( அண்ணா )
7. சிறந்த நடிகை - நித்யா ராம் ( அண்ணா )
8. சிறந்த சீரியல் - அண்ணா
9. சிறந்த வில்லன் - பூவிலங்கு மோகன் ( அண்ணா )
10. சிறந்த காமெடியன் - தாமரை ( நினைத்தாலே இனிக்கும் )
11. பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் ஜோடி - சந்தியா & ராஜீவ் ( சந்தியா ராகம் )
12. மிகவும் புகழ்பெற்ற அம்மா - சந்தியா ( சந்தியா ராகம் )
13. மிகவும் புகழ்பெற்ற அப்பா - சிவகுமார் ( வீரா )
இன்னும் பல விருதுகளுடன் பல பிரபலங்களயும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவித்துள்ளது ஜீ தமிழ். இந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவை வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 4:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்