தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தங்க பதக்கத்தை சோனு சூட்டிற்கு வழங்கிய கராத்தே சாம்பியன்!

தங்க பதக்கத்தை சோனு சூட்டிற்கு வழங்கிய கராத்தே சாம்பியன்!

Aarthi V HT Tamil

Jul 03, 2022, 12:55 PM IST

கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற அம்ரித்பால், சோனு சூட்டிற்கு வழங்கினார்.
கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற அம்ரித்பால், சோனு சூட்டிற்கு வழங்கினார்.

கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற அம்ரித்பால், சோனு சூட்டிற்கு வழங்கினார்.

நடிகர் சோனு சூட் நடிகராக மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

இதன் மூலம் சோனு சூட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவரிடம் உதவி வேண்டி பொது மக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வந்தனர். சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் கராத்தே போட்டிகளில் அகில இந்திய அளவில் தங்க பதக்கம் வென்றவர் அம்ரித்பாலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. 

நடிகர் சோனு சூட் தனது செலவில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் அம்ரித்பால்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தற்போது நலமாக இருக்கிறார். 

இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், "மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நீங்கள் காணும்போது, அது உங்கள் வாழ்க்கையை இன்னும் மதிப்புமிக்கதாக்குகிறது. அம்ரித்பாலுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை அவசரமாக தேவைப்படும் போது அவரைச் சந்தித்தேன். 

அவர் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை. அவருக்கு உதவியது என் வாழ்வின் மிகப் பெரிய கவுரவங்களில் ஒன்றாகும். 

அகில இந்திய கராத்தே சாம்பியன் அம்ரித்பால், எதிரணிக்கு ஒரு புள்ளி கூட கொடுக்காமல் தங்கப் பதக்கம் வென்றார்.  அவர் நம் அனைவருக்கும் பெருமையை அளிக்க இருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே அம்ரித்பால் தான் வென்ற தங்கப் பதக்கத்தை, சோனு சூட்டிற்கு வழங்கியுள்ளார். 

இது குறித்து அவர் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில்,"2 வருடங்களுக்கு முன்னர் என்னை யார் மீட்பார் என கண்டேன். 

உங்களது கனிவிற்கு நன்றி. என்னுடைய அகில இந்திய தங்க பதக்கத்தை உங்களுக்கு அப்பணிக்கிறேன். உங்களது உதவி இல்லையென்றால் அதனை என்னால் செய்திருக்கு முடியாது' எனக் குறிப்பிட்டு இருந்தார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.