தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திடீர் மாரடைப்பு.. மயங்கி விழுந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திடீர் மாரடைப்பு.. மயங்கி விழுந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Karthikeyan S HT Tamil

Jan 28, 2023, 11:06 AM IST

Actor Taraka Ratna: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினரும் நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா தெலுங்கு தேசம் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.
Actor Taraka Ratna: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினரும் நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா தெலுங்கு தேசம் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.

Actor Taraka Ratna: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினரும் நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா தெலுங்கு தேசம் கட்சியின் பேரணியில் கலந்துகொண்ட போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தெலுங்கு தேசம் கட்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் 'யுவ களம்' என்ற பெயரில் ஆந்திராவில் பேரணி நடத்தி வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் ஜூனியர் என்டிஆரின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா கலந்துகொண்டார்.

பேரணியின் போது தாரக ரத்னாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் தாரகா ரத்னாவை சந்தித்த பின் அவரது மாமா நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூறுகையில், "தாரக ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு உள்ளது. கவலைப்பட ஒன்றும் இல்லை. மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்". எனத் தெரிவித்தார்.

39 வயதான தெலுங்கு நடிகர் தாரகா ரத்னா 2002 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான 'ஒகடோ நம்பர் குர்ராடு' வில் நடிகராக அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தெலுங்கு வெப் சீரிஸ் 9 ஹவர்ஸில் தாரகா ரத்னா நடித்திருந்தார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நெல்லூரில் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேரும், குண்டூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.