லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! நாராயணர் காப்பாற்றினாரா? இந்த வாரம் லட்சுமி நாராயணா நமோ நமஹ எபிசோட்
Nov 26, 2024, 02:40 PM IST
லட்சுமியை கடத்த முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன், அவர் காப்பாற்ற நாராயணர் என்ன செய்ய போகிறார்? லட்சுமியின் இக்கட்டான நிலை நிவர்த்தியாயிற்றா? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ”லட்சுமி நாராயணா நமோ நமஹ” என்ற ஆன்மிகப் புராண தொடர்.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம் லட்சுமியை அடைய ஆசைப்படும் அசுரன் ஹயக்ரீவனிடமிருந்து நாராயணர் லட்சுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சியை பற்றியை காட்சிகளுடன் இடம்பெறுகிறது.
நாரயணரை பிரிந்து செல்லும் லட்சுமி
நாராயணர் தாமரை மலரில் லட்சுமியை தோற்றுவித்து, தன்னோடு இணைந்து பிரபஞ்ச கடமையை செய்யும்படி கேட்கிறார். அந்த நேரம் மரத்தில் தாய்ப்பறவையை, இன்னொரு வலிய பறவை வேட்டையாடுகிறது. லட்சுமி மரக்கூட்டில் குஞ்சுகள் தவிப்பதைக் கண்டு நாராயணரிடம் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். நாராயணரோ மௌனம் சாதிக்கிறார். வலிய பறவை தாய்ப்பறவையை வேட்டையாடிச் சென்று விடுகிறது.
லட்சுமி கோபத்துடன் நாராயணரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் நாராயணரே என்று கேட்கிறார். இதுதான் பிரபஞ்சத்தின் சமநிலை, இந்த குஞ்சுகள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகின்றன என்று கூறுகிறார். லட்சுமியினால் நாராயணரின் கூற்றை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாராயணரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்.
லட்சுமி இல்லாத வெறுமையில் நாராயணர் வாடுகிறார். அதேபோல் தனியாக இருக்கும் லட்சுமியும் பிரிவுத்துயரில் வாடுகிறார். இப்படியான நேரத்தில் சிவன், நாராயணரிடம் வந்து லட்சுமியை பிரிந்திருப்பது கூடாது என்று அறிவுரை வழங்குகிறார். நாராயணரும் உண்மையை உணர்கிறார்.
லட்சுமி கடத்த முயற்சிக்கும் அசுரன்
அப்போது அசுரன் ஹயக்ரீவன், நான் தான் இனி எல்லா லோகங்களுக்கும் நாராயணர். இனி லட்சுமி எனக்குதான் என்று சூழுரைத்து லட்சுமியை கடத்தி வருவதற்காக தன் தம்பி அஜினா அசுரனை அனுப்பி வைக்கிறான். அதற்கு முன்பு நாராயணருக்கு பிரச்னையைக் கொடுத்து கவனத்தை திசை திருப்புவதற்காக இரு அசுரர்களை வைத்து பிரம்மலோகத்திலிருந்த வேதத்தைத் திருடச் செய்கிறான்.
பிரம்மாவுக்கு உதவுவதற்காக நாராயாணர் வேதத்தை மிட்க சென்று விடுகிறார். அதனால் வேறுவழியில்லாமல் லட்சுமியை காக்கும் பொருட்டு தன் தீவிர பக்தன் நாகநாதனை அனுப்புகிறார். லட்சுமியை நெருங்கும் ஹயக்ரீவனின் அசுரத் தம்பியை நாகநாதன் எதிர்கொண்டு அடித்து வீழ்த்துகிறான். தோல்வியுறும் நிலையில் அசுரன் தன் அண்ணன் ஹயக்ரீவனை அழைக்கிறான். அங்கு ஹயக்ரீவன் தோன்றி நாகநாதனை அடித்து வீழ்த்துகிறான். பின் லட்சுமியை நெருங்குகிறான். அசுரன் ஹயக்ரீவனிடம் சிக்கிக்கொண்ட லட்சுமி தன்னைக் காக்கும்படி நாராயணருக்கு அபயக்குரல் எழுப்பிகிறார்.
நாராயணர் தோன்றி லட்சுமியை அசுரன் ஹயக்ரீவனிடமிருந்து காப்பாற்றினாரா? லட்சுமியின் இக்கட்டான நிலை நிவர்த்தியாயிற்றா? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பகும் லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடரை காணத் தவறாதீர்கள்.
சிவசக்தி திருவிளையாடல்
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு ஆன்மிக புராண தொடராக சிவசக்தி திருவிளையாடல் இருந்து வருகிறது. இந்த பிரபஞ்ச சுழற்சிக்கு சிவன் - சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.