வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!

வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 18, 2024 05:08 PM IST

வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!

வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!
வாழ்க்கை கொடுத்த தனுஷ்.. நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் - விக்னேஷ் சிவன் நட்பு உருவான கதை!

அந்த பேட்டியில், "நான் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து பணியாற்றினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தனுஷ் என்னிடம் உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும், என்ன வேண்டும் கேள் என்று சொன்னார். 

உடனே, நான் அவரிடம் சார் நீண்ட நாட்களாக நான் ஒரு கதை வைத்திருக்கிறேன்.அந்த கதையை நீங்கள் தயாரித்தால், அது என்னுடைய வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னேன். இதையடுத்து அவர் நிச்சயமாக நான் உனக்காக செய்கிறேன் என்றார். தொடர்ந்து ஹீரோ யார் என்று அவர் கேட்டபோது, நான் முன்னதாக இந்த கதையை கௌதம் கார்த்திக்கிடம் கூறி வைத்திருந்தேன். அதை அவரிடம் சொன்னேன். 

அது பின்னர் அப்படியே மாறி மாறி விஜய் சேதுபதியிடம் வந்தது. படத்திற்குள் நயன்தாராவை அழைத்து வந்ததும் தனுஷ் சார் தான்; ஒரு நாள் ஹீரோயின் யார் என்று கேட்டார். நான் இந்தக்கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதையாக இருந்தால், பிரபலமான ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். உடனே அவர் நயன்தாராவிடம் கதை சொல்கிறாயா என்று கேட்டார். அதைக் கேட்டவுடன், என் மனதிற்குள் எப்படியும் நயன்தாரா இந்தக் கதையை ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

சும்மா அவரை ஒரு ஒன்றரை மணி நேரம் பார்த்து விட்டு, ஒரு போட்டோ எடுத்துவிட்டு வந்துவிடலாம் என்றுதான் நான் அங்கு சென்றேன். அவரை பார்க்கும் போது ஆட்டோவில்தான் சென்றேன். 

நயன்தாரா எனக்கு ஒரு கிரீன் டீ கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவே இல்லை; ஆனாலும் பிடித்தது போல நடித்துக் குடித்தேன். முதலில் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு என்னுடைய கதையை கேட்க தயாரானார். அதுவே எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. காரணம் என்னவென்றால்,நான் முன்பு கதை சொன்ன ஆட்கள் எல்லோருமே கதையைக் கேட்கும் போது ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே தான் கதையை கேட்பார்கள். ஆனால், எனக்கு நயன் இந்த முறையில் கேட்டதே மிகவும் தன்னம்பிக்கையை கொடுத்தது. 

 கதை சொல்லும் பொழுதே அதில் இடம்பெற்று இருந்த இரண்டு மூன்று காமெடிகளுக்கு அவர் பயங்கரமாக செய்தார். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது. அவருக்கு கதைபிடித்து விட்டது என்று... கதை சொல்லி முடித்த பின்னர் உடனே அவர் இந்த கதையை செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் ஒவ்வொன்றாக கிடைத்துவிட்டது" என்று பேசினார்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.