Sankaranarayana Swamy: திருமணத் தடை நீக்கும் சங்கர நாராயணர்!
திருமணத் தடை நீக்கும் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ளது சங்கரநாராயண சுவாமி கோயில். தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் இக்கோயிலும் ஒன்று. தொடக்கத்தில் இக்கோயிலின் பெயர் புன்னவனப்பேறு எனவும் சங்கரரும் நாராயணரும் இணைந்து ஒருசேர காட்சி அளித்ததால் இந்த ஆலயத்திற்கு சங்கரனார் கோயில் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் இந்த பெயர் சங்கரன்கோவில் என மருவியது. இக்கோயிலின் தீர்த்தமாக நாகசுனை நீரும், தல விருட்சமாக புன்னை மரமும் விளங்குகின்றன. ராஜகோபுரம் 125 அடி உயரத்தில் ஒன்பது நிலைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
சிவனும் அறியும் இணைந்து காட்சி அருளிய இடமாக கூறப்படும் பகுதியில் சங்கரநாராயணசாமி சன்னதியும் சிவபெருமானை நோக்கி உமையம்மை கடும் தவம் மேற்கொண்ட இடத்தில் கோமதி அம்பாள் சன்னதியும் உள்ளது. கோயில் முகப்பின் வடபகுதியில் தோஷங்களை நீக்கும் நாகசுனை தெப்பக்குளம் அமைந்திருக்கிறது.
பாம்பரசர்களான சங்கரும் பதுமணம் உருவாக்கி அந்த தெப்பக்குளத்தில் மூழ்கி புற்றுவன் பூசி வழிபடுபவருக்கு விஷப்பூச்சிகளின் தொந்தரவிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாக தோஷங்களை தீர்க்கும் இந்த பொன்னியத்தலத்தின் கன்னிமூலையில் ஆறு அடி உயரத்தில் சர்பத்தை கையில் பிடித்தவாறு சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார்.
விநாயகரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு திருமண தடை நீங்கி வாழ்வில் மேன்மை பெறுவார்கள் என்பது கோயிலின் ஐதீகம். குறிப்பாக கோமதி அம்மன் சன்னதி முன்பாக ஸ்ரீசக்கர பீடப அமைந்திருக்கிறது. இதில் அமர்ந்து பக்தர்கள் வேண்டினால் வேண்டுதலை கோமதி அம்பாள் நிறைவேற்றுவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் சுவாமி அம்பாள் தேரோட்டமும் ஆதி தபசு விழாவில் அம்பாள் தேரோட்டமும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.