Dhanush: டான் உடன் இணையும் அசுரன்... இது DD4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்-actor dhanush will anounce his next project dd4 on 5 pm - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: டான் உடன் இணையும் அசுரன்... இது Dd4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

Dhanush: டான் உடன் இணையும் அசுரன்... இது DD4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

HT Tamil HT Tamil
Sep 19, 2024 04:35 PM IST

Dhanush: நடிகரும் இயக்குநருமான தனுஷ் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Dhanush:டான் உடன் இணையும் அசுரன்... இது DD4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்
Dhanush:டான் உடன் இணையும் அசுரன்... இது DD4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

துள்ளுவதோ இளமை மூலம் நடிகராக கோலிவுட்டில் கால் பதித்தவர் நடிகர் தனுஷ். இவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குநர் செல்வராகவனின் தம்பி என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர். பின், பல கேலி கிண்டல்களை கடந்து நடிப்பு அசுரனாக உருவெடுத்து பல்வேறு விருதுகளை வென்றார். மேலும், இந்திய அளவிலும் பெரும் நடிகராக தற்போது மாறியுள்ளார்.

இயக்குநர் அவதாரம்

நடிப்பை தாண்டி அவர் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பட்டையை கிளப்பி வந்தார். இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது. மேலும், பா.பாண்டி மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த தனுஷ் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கினார். 

தனுஷின் 50வது திரைப்படமான ராயனை அவரே இயக்கி நடித்தார். இது பலரது வரவேற்பையும் பெற்றது. இத்திரைப்படத்தில் மலையாள, கன்னட நடிகர்களின் கூட்டணி இடம்பெற்றதால் பிற மாநிலங்களில் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் இயக்குநராக தனுஷூக்கு ஒரு அங்கிகாரத்தையும் அளித்தது.

அடுத்தடுத்த அப்டேட்

இதற்கிடையில், தனுஷ் காதல் நகைச்சுவை கலவையாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். கஸ்தூரி, வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி,பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் சமீபத்தில் வெளியாகி 1 கோடி பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் அவரது எக்ஸ தள பக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தனுஷ் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

நடிப்பின் அசுரன் தனுஷ்- பாராட்டும் நிறுவனம்

இந்நிலையில், இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் முதல் படைப்பு நடிப்பின் அசுரன் தனுஷுடன் இணைந்து அளிப்பதில் பெருமைப்படுகிறோம். அவரது 52வது திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமையும். திரையுலகில் புதிய பயணத்தை தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.