தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஆண் என்றால் ராணவ்.. பெண் என்றால் மஞ்சரி’ ஏன் நடக்குது இந்த டார்க்கெட்? பின்னணி தகவல்!

‘ஆண் என்றால் ராணவ்.. பெண் என்றால் மஞ்சரி’ ஏன் நடக்குது இந்த டார்க்கெட்? பின்னணி தகவல்!

HT Tamil HT Tamil

Dec 08, 2024, 10:50 AM IST

google News
ஒரு வீட்டின் பெரும்பான்மை கூட்டம், ராணவ் மற்றும் மஞ்சரியை குறி வைத்து டார்க்கெட் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் அந்த இருவரோடு ஒப்பிட்டால், சத்யா, ரஞ்சித், விஷால் எல்லாம் அந்த வீட்டில் என்ன தான்செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு வீட்டின் பெரும்பான்மை கூட்டம், ராணவ் மற்றும் மஞ்சரியை குறி வைத்து டார்க்கெட் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் அந்த இருவரோடு ஒப்பிட்டால், சத்யா, ரஞ்சித், விஷால் எல்லாம் அந்த வீட்டில் என்ன தான்செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வீட்டின் பெரும்பான்மை கூட்டம், ராணவ் மற்றும் மஞ்சரியை குறி வைத்து டார்க்கெட் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் அந்த இருவரோடு ஒப்பிட்டால், சத்யா, ரஞ்சித், விஷால் எல்லாம் அந்த வீட்டில் என்ன தான்செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பிக்பாஸ் தமிழ்  நிகழ்ச்சியின் 8 வது சீசனை பார்ப்பவர்களுக்கு ஒரு விசயம் புரிந்து கொள்ள முடியும். நாமினேஷனாக இருக்கட்டும், குறைகளை சொல்லும் இடமாக இருக்கட்டும், ஆண் என்றால் ராணவ், பெண் என்றால் மஞ்சரி. இதுதான், பெரும்பாலான போட்டியாளர்களின் தேர்வாக இருக்கிறது. இவர்கள் இவரை மட்டும் குறி வைப்பது ஏன்? எதனால் இது நடக்கிறது? ஆழாக உள்ளே போய் பார்த்தால், அதன் பின்னணி பயங்கர திட்டமிடலாக உள்ளது. 

புதிய போட்டியாளர்களின் வருகை

ஃவைல்ட்கார்டு போட்டியாளர்களாக மஞ்சரி, ரயான், ராணவ், வர்ஷினி, ரியா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி ஆகினர். இதற்கு முன் இல்லாத சீசனில் நடந்த ஒரு விசயம், இந்த சீசனில் கண் கூடாக நடந்தது. புதிதாக வந்த போட்டியாளர்களை, வீட்டில் இருந்த பழைய போட்டியாளர்களுக்கு ஏற்கமனமில்லை. அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தனர். 

அவர்களின் ரியா, வர்ஷினி ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது, ராணவ் மட்டும் மஞ்சரி மீது பார்வை திரும்பியிருக்கிறது. அப்போ ரயான்? இதில் சுதாரித்தவர், அல்லது சுயநலமானவர் ரயான் தான். ஆரம்பத்தில் புதிதாக வந்த போட்டியாளர்களுடன் சுற்றி வந்த ரயான், அதன் பின் தாங்கள் குறி வைக்கப்படுவதை உணர்ந்து, பழைய போட்டியாளர்களுடன் ஐக்கியமாக முடிவு செய்தார்.

உண்மையில் அவரை ஏற்க  மற்றவர்கள் தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான், ‘அன்பு.. பண்பு.. பாசம்’ என்கிற கவசத்துடன் சுற்றி வரும் ஜாக்லின் கண்ணில் ரயான் பட்டார். தன் அணிக்கு பலசாலிகள் வேண்டும் என்று நினைத்த ஜாக்லினுக்கும், ஏதாவது ஒரு அணியில் இடம் கிடைக்காத என்று ஏங்கிக் கொண்டிருந்த ரயானுக்கும் பரஸ்பரம் ஆதரவு கிடைத்தது. 

தப்பித்த ரயான்.. சிக்கிய ராணவ்

ரயான் பழைய போட்டியாளர்களுடன் நெருக்கமானதால், வெளியேற்றப்படும் ரேடாரில் இருந்து அவர் நீங்கினார். எஞ்சி இருப்பது, ராணவ் மற்றும் மஞ்சரி மட்டும் தான். இதில் மஞ்சரி, கொஞ்சம் அடித்து ஆடுகிறார். அவரை முடிந்த வரை உடைக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர் தாக்குபிடிக்கிறார். இதில் ராணவ் பாடு தான் திண்டாட்டம். சுய சிந்தனையில் பின்தங்கியவராக காணப்படும் ராணவ், பேசவும் தெரியாமல், செயல்படவும் தெரியாமல் காட்டாற்றில் அடித்து வரப்பட்ட கட்டை மரம் போல உலாவிக் கொண்டிருக்கிறார். 

அவருக்கு பல விசயங்கள் புரியவே இல்லை. அதை, அவரை குறி வைக்கும் போட்டியாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். கல்லூரிக்கு வரும் ஜூனியரை, சீனியர் ராஃகிங் செய்வதைப் போல தான், பிக்பாஸ் வீட்டில் ராணவ் மற்றும் மஞ்சரியின் நிலை. அன்ஷிதா நேரடியாகவே மஞ்சரியை டார்க்கெட் செய்கிறார். மஞ்சரியை ஹைனா போலவே குதறுகிறார் சவுந்தர்யா. அவசியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மஞ்சரியை வைத்து செய்கிறார் அருண். 

சந்து பொந்தெல்லாம் கிடைக்கிற சாக்கில், மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி கோல் மூட்டுகிறார் சத்யா. தீபக் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு வீட்டின் பெரும்பான்மை கூட்டம், ராணவ் மற்றும் மஞ்சரியை குறி வைத்து டார்க்கெட் செய்து  கொண்டிருக்கிறது. உண்மையில் அந்த இருவரோடு ஒப்பிட்டால், சத்யா, ரஞ்சித், VJ விஷால் எல்லாம் அந்த வீட்டில் என்ன தான்செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், அவர்களை அவர்களின் நட்பு கவசம் காக்கிறது. அதுவே புதிதாக வந்த இருவரை தாக்குகிறது. அவர்களில் மஞ்சரி கொஞ்சம் தாக்குபிடிப்பார் என்றே தெரிகிறது. 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி