Jacquline : ‘நான் லெஸ்பியனா? உங்களுக்கு என்ன உறுத்துது?’ ஜாக்லின் ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jacquline : ‘நான் லெஸ்பியனா? உங்களுக்கு என்ன உறுத்துது?’ ஜாக்லின் ஆவேசம்!

Jacquline : ‘நான் லெஸ்பியனா? உங்களுக்கு என்ன உறுத்துது?’ ஜாக்லின் ஆவேசம்!

HT Tamil Desk HT Tamil
Mar 02, 2023 06:15 AM IST

‘நீங்கள் லெஸ்பியன் என்று சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று நெறியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார்.

தொகுப்பாளரும் நடிகையுமான ஜாக்லின்
தொகுப்பாளரும் நடிகையுமான ஜாக்லின்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, பெரிய அளவில் பேசப்பட, ஜாக்லின் பெரிய அளவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வாய்ப்புகள் ஜாக்லினுக்கு வரவில்லை.

இதனால் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பிய ஜாக்லின், தேன்மொழி எம்.ஏ., என்கிற சீரியல் மூலம், விஜய் டிவியில் மீண்டும் பிரவேசம் தந்தார். சீரியல் எண்ட்ரி அவருக்கு நல்ல புகழை தந்தாலும், அவரது உடல் எடையை வைத்து நிறைய கேலி, கிண்டல்களை சமூக வலைதளம் மூலம் சந்தித்தார் ஜாக்லின். 

இதைத் தொடர்ந்து சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார் ஜாக்லின். அதற்காக அவர் செய்த உடற்பயிற்சிகள் தீவிர முயற்சிகள் அனைத்துமே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்தார். 

முன்பு இருந்த ஜாக்லினா இது, என்று கேட்கும் அளவிற்கு, புதுப்பொலிவாக மாறியிருக்கும் ஜாக்லின், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒரு கேள்வியாக, ‘நீங்கள் லெஸ்பியன் என்று சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று நெறியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஜாக்லின், ‘‘இங்கே மூன்று பேருடன் சேர்ந்து போட்டா போட்டால் கூட, அப்படி தான் கமெண்ட் செய்வார்கள். என்னை மட்டும் ஏன் இப்படி தவறாக நினைக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை! அவர்களுக்கு ஏன் எப்படி உறுத்துகிறது? என்னை மட்டும் இப்படி கூறுவதில்லை, என்னைப் போலவே, பல பிரபலங்களையும் இப்படி தான் விமர்சிக்கிறார்கள், அவர்களை என்ன செய்வது?’’ என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் ஜாக்லின். 

ஜாக்லினின் இந்த பேட்டி, பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.