ரஞ்சித் முத்தத்தில் காமமா.. தப்பில்லையே.. தர்ஷா புடவை கட்டி ரஞ்சித் பாக்குற அளவுக்கு.. மனைவி பிரியா ராமன் புது விளக்கம்!
ரஞ்சித் ஜாக்குலின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்த விஷயம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தால் பிரியா ராமன், குழந்தைகளை எல்லாம் நாம பண்ண மாட்டோமா.. அதுல வந்து உங்களுக்கு காமம் தோணிச்சா.. அது ஒரு காம பார்வையா இருந்ததா..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் விலகிய நிலையில் விஜய் சேதுபதி இணைந்த பிக்பாஸ் மற்ற சீசன்களை விட இந்த சீசன்களை விடவும் கட்ட தொடங்கியது. இதில் போட்டியாளர்களின் ஒருவராக நடிகர் ரஞ்சித் உள்ளார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற முதல் நாளில் இருந்து அவரைச் சுற்றியே பல்வேறு விமர்சனங்கள் வலம் வர தொடங்கியது. இந்நிலையில் நடிகர் ரஞ்சித் குறித்து அவரது மனைவி பிரியா ராமன் Galatta Tamil யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம். பிக்பாஸ் தொடர்ந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.
அவர நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்
எல்லாரையும் எடுத்த உடனே எல்லாரையும் புரிஞ்சுக்க முடியாது. அதுக்கான ஒரு சின்ன விஷயங்கள் உள்ள போயிக்கிட்டு இருக்கு. fake அப்படின்ற ஒரு 3 ஸ்டிக்கர் ஒட்டி விட்டாங்க. வேற எல்லாருக்குமே கிடைத்தது. ஆனா அவருக்கு நிறைய கிடைச்சதுல கொஞ்சம் பீல்தா பண்ணார் அவரு.. ஏன்னா டக்குன்னு எல்லாருக்கும் அவர புரிஞ்சுக்க முடில. இதுல என்ன ரொம்ப கஷ்டமான விஷயம்னா அவர் ரொம்ப எதார்த்தமா இருக்காரு. அவர் பேசுற பேச்சு ஆகட்டும்.. சாமி.. ஏ.. தங்கம் .. இது அவர் ஊரு பேச்சு… அவங்க ஊருல இருந்து நிறைய பேர் என்னை கேட்டுட்டே இருக்காங்க.. அது என்ன அக்கா இப்படி சொல்லிட்டாங்க. அது நம்ம ஊரு பேச்சு அது அவங்களுக்கு இவ்வளவு கூட புரிலையான்னாங்க.. நா சொன்னே நீங்க இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க. உங்க எல்லாருக்கும் ரெப்ரசன்டேட்டீவா அண்ணன் உள்ள இருக்காரு. அவரு யாருன்றத அவரு மறுக்கல. அத அவங்களும் புரிஞ்சுப்பாங்க.. அது வர நாம வெயிட் பண்ணணு.. அவ்வளவு தா சொல்ல முடியும்.
சாது மாதிரி ஒரு மனுஷன்
நீ டோட்டலாவே ஃபேக்கா இருக்கேன்னு சொன்னா அவர் என்ன பண்ணுவாரு. அதுவும் எல்லாரும் பாக்குறாங்க இல்ல. எத்தனை வருஷமா சம்பாதிச்சு வச்ச ஒரு நட்பு, ஒரு குட் வில், ஒரு பேரு, எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்.. வெளி உலகத்துல எவ்வளவு நல்லது பண்ணி இருக்காங்க.. அதுக்காக அவருடைய அக்கவுண்ட்ல ஃபர்ஸ்டே ஒரு கிரெடிட் இருக்கணும்னு நான் சொல்லல. ஆனா அவருடைய ஐடென்டிட்டி அதை இருக்கிறதே பொய்ன்னு சொல்லிட்டாங்க.. சாது மாதிரி ஒரு மனுஷன் என்ன பண்றது... இட்ஸ் ஓகே.. இதுவும் கடந்து போகும் அவரால நமக்கு ஒரு சோகமா இருக்கிறதோ இல்லையோ .. ஒரு மாதிரி வேற யாரும் எதுவும் சொல்லி என் மனசை கஷ்ட படுத்த கூடாது அப்படின்னு நினைக்கிறாரு அதனாலதான் அத்தனை தடவ பிரியா.. பிரியான்னு சொல்றார்.
தர்ஷா குப்தா சாரி கட்டி நடந்து வருவாங்க அப்ப ரஞ்சித் சார் கிச்சன்ல இருந்து பார்ப்பாங்க அப்ப எல்லாருமே ட்ரோல் பண்ணது கவுண்டம்பாளையம் ரஞ்சித் என்ன ஒரு பெண்களுக்காக படம் எடுத்துட்டு இப்படி பெண்களை பார்க்கிறார் என்பதுதான்.. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியா ராமன், அவர் உண்மையா பார்த்தாரா? ஏன்னா தர்ஷாலாம் அவருக்கு வந்து ரொம்ப நல்லா தெரிஞ்ச ஒரு லேடி தான். செஞ்தூரப் பூவேன்னு ஒரு சீரியல் விஜய் டிவிக்காக பண்ணும் போது தர்ஷா தான் அதுல ஒரு நெகட்டிவ் கேரக்டர் பண்ணாங்க. சோ தர்ஷா எல்லாம் ரொம்ப நல்லா தெரியும். நானே நிறைய தடவை மீட் பண்ணி இருக்கேன். நல்லா தான் பிஹேவ் பண்ணுவாங்க. அப்படி தர்ஷா புடவை கட்டி ரஞ்சித் பாக்குற அளவுக்கு....சாரி.. தப்பா நினைச்சுக்காதீங்க.
ரஞ்சித் ஜாக்குலின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்த விஷயம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தால் பிரியா ராமன், குழந்தைகளை எல்லாம் நாம பண்ண மாட்டோமா.. அதுல வந்து உங்களுக்கு காமம் தோணிச்சா.. அது ஒரு காம பார்வையா இருந்ததா.. பதில் கேள்வி என்று கேட்டீங்கன்னா ஆமா.. ஃபோர்ஹெட் கிஸ் என்பது ஒரு அப்பா தன் குழந்தைக்கு கொடுப்பது, ஒரு மூத்த ஒருவர் அந்த வீட்டில் சிறுவர்களுக்கு கொடுப்பது, ஒரு அண்ணா தன்னோட தங்கச்சிக்கு கொடுக்கிறது மோஸ்ட் பியூர் ஹெட் கிஸ்.. நான் உன்னை பாதுகாப்பேன் என்பதுதான்.. ஓகே அந்த முத்தத்திற்கு அர்த்தம்.. பேசிக்கா ரஞ்சித் கிட்ட ஒரு பிக் பிரதர் எனர்ஜி இருக்கும் என்பது உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்