தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அதள பாதாளத்திற்கு சென்ற டி.ஆர்.பி.. வச்சு செஞ்சும் வேலைக்கு ஆகலையே.. பரிதாபத்தில் பிக்பாஸ்

அதள பாதாளத்திற்கு சென்ற டி.ஆர்.பி.. வச்சு செஞ்சும் வேலைக்கு ஆகலையே.. பரிதாபத்தில் பிக்பாஸ்

Oct 18, 2024, 05:01 PM IST

google News
நிகழ்ச்சியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் டிஆர்பியில் மிகவும் பாதளத்திற்கு சென்றதால், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இனி என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் டிஆர்பியில் மிகவும் பாதளத்திற்கு சென்றதால், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இனி என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நிகழ்ச்சியில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் டிஆர்பியில் மிகவும் பாதளத்திற்கு சென்றதால், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இனி என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

பாய்ஸ் vs கேர்ள்ஸ்

ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார். பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மிஞ்சியது அழுகை

வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றது. பின் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என பிரிந்து ஆரம்பித்த ஆட்டம் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் என நினைத்த மக்களுக்கு மிஞ்சியது என்னவோ வெறும் அழுகை காட்சிகள் தான்.

வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

முதல் வார முடிவில், கடந்த ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து செய்தார். ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள பயன்படுத்திய அத்தனை பொய்களையும் ஒரே நாளில் முடித்துவிட்டிருப்பார்.

பெண்கள் ஏன் அறையை தேர்ந்தெடுத்தார்கள், ஆண்கள் ஏன் விட்டுக் கொடுத்தார்கள் என பதில் வந்த போதே வீட்டிலுள்ள அனைவரின் முகமும் மாறியது. அவர்கள் காரணங்களை மலுப்பி மலுப்பி கூறிய போதும் விஜய் சேதுபதி உண்மை வெளிவரும் வரை விடாமல் கேள்வி எழுப்பி வந்தார். அதிலும், அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் முன்பே, நறுக்கென்று கூறிய விதமும், இத்தனை ஆண்டுகால பிக்பாஸ் வரலாற்றில் புதிதாக இருந்தது.

முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் அனைவரையும் விஜய் சேதுபதி பிரித்து மேய்ந்துள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் விளையாட வராமல் சாப்பிட்டு தூங்க வந்துள்ளனர் என அவர்களின் முகத்திற்கு நேராகவே பேசியிருந்தார். இதனால், அடுத்த நாளிலிருந்தே போட்டியாளர்கள் தங்கள் ஆட்டத்தை ஆட ஆரம்பித்துள்ளனர்.

தினமும் புதுப்புது சண்டை, புதுப்புது கலவரம், அழுகை என பிக்பாஸ் வீடே அழுத வண்ணமாக இருந்தது.

குறையும் பார்வையாளர்கள்

இதனால், வார இறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பிக்பாஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 24 மணி நேர நிகழ்ச்சி நேரலையாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி வருவதால், பலரும் தங்கள் ஓய்வு நேரங்களில் அதனை பார்த்து வருகின்றனர். இதனால், விஜய் டிவியை பார்க்கும் பார்வையாளர்களும் குறைந்து வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

சரிந்த டிஆர்பி

இந்நிலையில் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான டிஆர்பி வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு வெறும் 5.72 டிஆர்பி புள்ளிகளே கிடைத்துள்ளது. மேலும், வார இறுதி நாட்களில் வெளியான நிகழ்ச்சிகளுக்கு 4.27 டிஆர்பி புள்ளிகளே கிடைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் புள்ளிகளை வைத்துப் பார்த்தால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட இது மிகவும் குறைவு.

ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி

டிவி நிகழ்சசிகளுக்கான இந்த வார டிஆர்பியில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களே தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. சன் டிவி டிஆர்பியில் முதல் 6 இடங்களை தக்கவைத்துள்ளன.

7வது இடத்தில் தான் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இது 6.95 புள்ளிகளை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 9ம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.05 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதை கவனிக்கும் போது, விஜய் டிவியின் டிஆர்பி மெல்ல மெல்ல சரிந்து வருவது தெரிகிறது. இதனால், விஜய் டிவி தனது சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை