நான் பாத்ரூமுக்குள்ள வரணுமா? வந்தா நடக்குறதே வேற! என்னதான் நடக்கிறது பிக்பாஸ் வீட்டுக்குள்?
பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண்கள் அணி பக்கம் ஜாக்குலின் அனுமதி கேட்காமல் வந்ததால், வீட்டிற்குள் கலவரமே வெடித்துள்ளது. இதன் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நான் பாத்ரூமுக்குள்ள வரணுமா? வந்தா நடக்குறதே வேற! என்னதான் நடக்கிறது பிக்பாஸ் வீட்டுக்குள்?
பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் பிரச்சனை தலைவிரித்து ஆடிவரும் நிலையில், ஜாக்குலின் ஆண்கள் அறை பக்கம் அனுமதி இல்லாமல் நுழைந்து புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
பிக்பாஸ் வீட்டில் மொத்த போட்டியாளர்களுக்கு சமைப்பது யார் என ஆண்கள் அணி முடிவு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளது. இதையடுத்து, பெண்கள் அணியைச் சேர்ந்த ஜாக்குலினும், சாச்சனாவும் இணைந்து அத்தனை போட்டியாளர்களுக்கும் சமைக்க வேண்டும். அத்துடன் அவர்களே சமைத்த பாத்திரங்களை கழுவியும் வைக்க வேண்டும் என ஆண்கள் அணியினர் கூறியுள்ளனர்.
இதனால் கொந்தளித்துள்ள பெண்கள் அணி, ஆண்கள் அணியை பழிவாங்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்து வருகின்றனர்.