விளையாட வந்தாங்களா இல்ல அழுக வந்தாங்களா? இல்ல அழுகுறது தான் விளையாட்டா? முடியல பிக்பாஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விளையாட வந்தாங்களா இல்ல அழுக வந்தாங்களா? இல்ல அழுகுறது தான் விளையாட்டா? முடியல பிக்பாஸ்

விளையாட வந்தாங்களா இல்ல அழுக வந்தாங்களா? இல்ல அழுகுறது தான் விளையாட்டா? முடியல பிக்பாஸ்

Malavica Natarajan HT Tamil
Oct 15, 2024 09:35 PM IST

பிக்பாஸ் நிழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளியான அனைத்து நிகழ்ச்சிகளிலும் யாராவது ஒருவர் அழுதுகொண்டே இருக்கின்றனர். இதையே விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு வருகிறது.

விளையாட வந்தாங்களா இல்ல அழுக வந்தாங்களா? இல்ல அழுகுறது தான் விளையாட்டா? முடியல பிக்பாஸ்
விளையாட வந்தாங்களா இல்ல அழுக வந்தாங்களா? இல்ல அழுகுறது தான் விளையாட்டா? முடியல பிக்பாஸ்

ஜாக்குலின் அழுகை

அதற்கு தகுந்தாற்போல இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 4வது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இந்த ப்ரோமோவில், ஜாக்குலின் அழுது கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இதுகுறித்து முத்துக்குமரன் கேள்வி எழுப்ப அவரிடம் அழுதுகொண்டே சண்டையிடுகிறார் ஜாக்குலின்.

எதற்கெடுத்தாலும் ஏன் அழுகிறீர்கள் என முத்துக்குமரன் கேட்க நான் எதற்கு அழ வேண்டும் என்பது கூட உங்கள் பிரச்சனையாக இருக்கிறதா என ஜாக்குலின் கேள்வி எழுப்புகிறார். இந்த ப்ரோமோ பலரையும் மீண்டும் மீண்டுமா என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

முதல்நாளே அழ ஆரம்பித்த பவித்ரா, ஜாக்குலின்

பிக்பாஸ் வீட்டின் முதல் நாளே அழுகையில் தான் ஆரம்பித்துள்ளது. பெண்கள் அணியும், ஆண்கள் அணியும் தங்குவதற்கான ரூமை தேர்ந்தெடுத்த விவகாரத்தில் ஜாக்குலினுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதற்காக பெண்கள் செய்த தியாகத்தை ஏற்க ஜாக்குலின் தயாரக இல்லை. அதனால், அந்த ரூமிற்குள்ளே செல்லாமல் இருந்தார்.

ஜாக்குலினின் இந்த செயல் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் அணிக்காக ஜாக்குலின் விளையாடச் சென்றால் அது நமக்கு சாதகமாக இருக்காது என சுனிதா கூறி சண்டையிட்டார். அந்த சமயத்தில், ஜாக்குலினுக்கும் பவித்ராவிற்கும் சண்டை ஏற்பட, பவித்ரா சூழ்நிலையை ஏற்க முடியாமல் அழத் தொடங்கினார், இவர் ஆரம்பித்து வைத்த அழுகையை இப்போது அங்குள்ள பலரும் கையிலெடுத்துள்ளனர்.

கோவத்துடன் கத்தி அழுத பவித்ரா

இதையடுத்து, பவித்ரா ஆண்கள் அணியுடன் பிராங்க் செய்தபோது அது பெண்கள் அணியை மிகவும் கோபப்படுத்தியது. இதுகுறித்து தர்ஷா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் கேள்வி எழுப்பிய உடன் பவித்ரா அழுத்தொடங்கியதுடன் ஆக்ரோஷமாக கத்தினார். பின் தன் தந்தை பற்றி பேசிய போது ஆனந்தி அழுதார்.

அழ வேண்டாம் என அறிவுறுத்தி அழுத சாச்சனா

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு அழுகிறார்கள் என முதல் நாளிலே எலிமினேட் செய்யப்பட்டு பின் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்த சாச்சனா கூறியிருந்தார். அப்போது, அவர் இனி பெண்கள் இந்த வீட்டில் அழக்கூடாது குறிப்பாக ஆண்கள் முன் பெண்கள் அழவே கூடாது எனக் கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய அன்றே அவர் ஆண்களிடம் பேசிக்கொண்டே அழுதிருப்பார். இதனால், அங்கேயே விக்கெட் விழுந்து விட்டது.

ஏமாற்றத்தால் அழுத சுனிதா

பின்னர், பெண்கள் அணியில் சுனிதா, அன்ஷிதா, சௌந்தர்யா ஆகிய மூவரும் வீக்கான போட்டியாளர்களாக உள்ளனர் என அவர்களிடம் சொல்லாமல் சாச்சனா ரவீந்தரிடம் கூறியிருந்தார். இதை விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியதும் சுனிதா அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதிருப்பார்.

ப்ராங்கால் அழுத ரவீந்தர், ஆனந்தி

பின்னர், ரவீந்தர் தனது உடல் அசௌகரியங்களை காரணமாக வைத்து, எங்களிடம் வேலை வாங்கிவிட்டு ப்ராங்கில் நன்றாக நடக்கிறார் என ஆனந்தி கூறியதால், அதை தாங்க முடியாமல் ரவீந்தர் அழுதார். பின் ரவீந்தர் அழுததை கேள்விப்பட்ட ஆனந்தியும் அழுதார்.

வேலை செய்ய அழுத சாச்சனா

இந்நிலையில் இன்று, பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஜாக்குலினும், சாச்சனாவும் சமைக்க வேண்டும் மற்றும் பாத்திரங்களையும் கழுவ வேண்டும் எனக் குறிப்பிட்டதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சாச்சனா அழுதார்.

காரணமே சொல்லாமல் அழும் ஜாக்குலின்

தற்போது, என்ன காரணம் என்று கூறாமல் மீண்டும் ஜாக்குலின் அழ ஆரம்பித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது உண்மையில் பிக்பாஸ் வீடு தானா அல்லது அழகை வர வைக்கும் இடமா என்ற சந்தேகம் வந்தபடியே உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.