டிஆர்பியில் கெத்துக் காட்டும் கயல்! சன் டிவி தான் டாப்பு! விஜய் டிவிக்கு எல்லாம் போச்சா!
தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டி. ஆர்.பி. ரேட்டிங்கில் அனைத்து டிவி சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி முதல் 5 இடங்களை பிடித்துள்ளது சன் டிவி.

திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். திரைப்படங்களின் நடிக்கர்களை விட சீரியல் நடிகர்கள் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர். மேலும் ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன. இவை அனைத்தும் சரியாக இருந்து ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தால் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தமிழ் சீயல்களுக்கான சேனல்களை பொறுத்த வரை, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஓடும் பிரைம் டைம் சீரியல்களே அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து டிவி சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி முதல் 5 இடங்களை பிடித்துள்ளது சன் டிவி. விஜய் டிவி சீரியல்கள் முதல் 5 இடத்தில் இல்லாமல் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபமும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கெத்துக் காட்டும் சன் டிவி
கடந்த வாரம் முன்னிலை வகித்த விஜய் டிவி சீரியல்களை அசால்ட்டாக கீழே தள்ளி முதல் 5 இடத்தை கெட்டியாக பிடித்துள்ளன சன் டிவி சீரியல்கள். சைத்தாரா மற்றும் சஞ்சீவி ஆகியோர் நடிக்கும் கயல் சீரியல் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பெண்ணே சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் சன் டிவி சீரியல்களில் முக்கியமான சீரியல்களான மூன்று முடிச்சு மற்றும் மருமகள் ஆகிய சீரியல் மூன்று, நான்காவது இடத்தை பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் உள்ளது.