வச்சு செய்யும் விஜய் சேதுபதி.. பிக்பாஸில் புட்டு புட்டு வைக்கப்படும் உண்மைகள்.. ரோஸ்ட் செய்யும் ஹோஸ்ட்!
பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்த பஞ்சாயத்துகளில் அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டிருந்த நிலையில், அத்தனையையும் உடைத்து முதல் வாரமே அதகளம் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் சீசன் 8 தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து செய்து வருகிறார்.
மலுப்பி மலுப்பி கேள்வி கேட்ட விஜய் சேதுபதி
ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள பயன்படுத்திய அத்தனை பொய்களையும் நேற்று ஒரே நாளில் முடித்துவிட்டிருப்பார். பெண்கள் ஏன் அறையை தேர்ந்தெடுத்தார்கள், ஆண்கள் ஏன் விட்டுக் கொடுத்தார்கள் என பதில் வந்த போதே வீட்டிலுள்ள அனைவரின் முகமும் மாறியது. அவர்கள் காரணங்களை மலுப்பி மலுப்பி கூறிய போதும் விஜய் சேதுபதி உண்மை வெளிவரும் வரை விடாமல் கேள்வி எழுப்பி வந்தார்.
அதிலும், அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் முன்பே, நறுக்கென்று கூறிய விதமும், இத்தனை ஆண்டுகால பிக்பாஸ் வரலாற்றில் புதிதாக இருந்தது.