தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போட்டியில் ஜெயித்தும் சந்தோஷம் இல்லாத பெண்கள் அணி.. நாமினேஷன் பாஸால் நடக்கும் குழப்பம்..

போட்டியில் ஜெயித்தும் சந்தோஷம் இல்லாத பெண்கள் அணி.. நாமினேஷன் பாஸால் நடக்கும் குழப்பம்..

Oct 25, 2024, 01:52 PM IST

google News
நாமினேஷன் ஃபிரி பாஸ் வென்ற பெண்கள் அணி, அதன் மூலம் எந்தப் போட்டியாளரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் தக்க வைக்க முடிவு செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
நாமினேஷன் ஃபிரி பாஸ் வென்ற பெண்கள் அணி, அதன் மூலம் எந்தப் போட்டியாளரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் தக்க வைக்க முடிவு செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

நாமினேஷன் ஃபிரி பாஸ் வென்ற பெண்கள் அணி, அதன் மூலம் எந்தப் போட்டியாளரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் தக்க வைக்க முடிவு செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில் யார் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாமினேஷன் ஃபிரி பாஸை வென்ற பெண்கள் அணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

நாமினேஷன் பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி பெண்கள் அணி என பிரிந்து கேம்களை விளையாடி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நபர்களை அந்தந்த அணியினர் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பாக நாமினேஷன் ஃபிரி பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் கேம்கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற அணிக்கு இந்த பாஸ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற பெண்கள்

இந்த நாமினேஷன் பாஸ் வைத்திருக்கும் அணியினர், நாமினேஷன் பட்டியலில் இருக்கும் தங்கள் அணியினர் ஒருவரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் 3வது வாரத்திற்கான நாமினேஷன் பாஸை பெண்கள் அணி வெற்றி பெற்றது. இதனால், பெண்கள் அணியினரால் அவர்கள் வீட்டில் இருந்த ஒரு நபரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற முடியும்.

காப்பாற்றப்படும் போட்டியாளர் யார்?

அப்படி இருக்கையில் பெண்கள் அணியினர் எந்த போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப் போகிறது என்பதை இன்று முடிவெடுத்துள்ளது. நாமினேஷன் பட்டியலின் படி பார்த்தால், பெண்கள் அணியிலுள்ள ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா, தர்ஷா, அன்ஷிதா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. வீட்டில் உள்ள 9 பெண் போட்டியாளர்களில் 5 போட்டியாளர்களின் பெயர் நாமினேஷன் பட்டியலில் இருப்பதால், பிக்பாஸ் பெண்கள் அணியிலிருந்து யார் காப்பற்றப்படுவார் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

குழு ஆலோசனை

இதனால், நாமினேட் பட்டியலில் இல்லாத மற்ற 4 போட்டியாளர்களும் கலந்து ஆலோசித்து யாரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம் என முடிவெடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி, சுனிதா, சாச்சனா, ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் பெண்கள் அணியிலிருந்து யாரை காப்பாற்றுவது என முடிவெடுக்க உள்ளனர். அதேசமயத்தில் அவர்கள் நாமினேஷன் பாஸ் குறித்து, போட்டியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்டு வருகின்றனர்.

பெண்களின் கருத்து

ஜாக்குலின் தனக்கு நாமினேஷன் பாஸ் வேண்டாம் எனக் கூறிவிட்டார். நான் பிக்பாஸ் வீட்டில் இன்னும் ஒரு வாரம் இருக்க வேண்டும் என மக்கள் நினைத்தால் நான் இருப்பேன். நாமினேஷன் பாஸை வேறு யாராவது ஒரு போட்டியாளர்களுக்கு கொடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் தன்னிடம் என்னென்ன குறைகளை கூறினாரோ அவை அனைத்தையும் மாற்றிக் கொண்டு நான் இந்த ஒரு வாரமாக விளையாடி வருகிறேன் என தர்ஷா தான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

நான் 100 சதவீதம் என்னுடைய உழைப்பை போட்டியில் வழங்கி வருகிறேன். ஆனால், அவை ஏன் இந்தளவு தவறாக வெளியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை என பவித்ரா கூறியுள்ளார்.

எல்லா முறையும் மக்கள் என்னை காப்பாற்றுவார்கள் என என்னால் கூற முடியாது. நான் அணிக்காக முழு முயற்சியையும் வழங்கியது போல் எனக்கே தெரியவில்லை என சௌந்தர்யா கூறியுள்ளார். அதேபோல, அன்ஷிதா என்ன நடந்தாலும் அதை சமாளித்து முன்னேறிச் செல்ல தயாராக தான் இருப்பதாக கூறியுள்ளார்.

தப்பித்த ஒருவர் யார்?

இவர்கள் அனைவரின் கருத்துகளையும் கேட்ட பெண்கள் அணியிலுள்ள மற்ற போட்டியாளர்கள் அணியின் நலனை கருத்தில் கொண்டு ஒருவரை காப்பாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த ஒருவர் யார் என்பதை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண முடியும் எனத் தெரிகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி