பிக்பாஸில் இது புதுசு.. துரத்தி துரத்தி சம்பவம் செய்த தர்ஷிகா.. கூல் கேப்டன் போல!
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 3வது வாரமே தொடங்கியுள்ள நிலையில், தர்ஷிகா மீண்டும் கேப்டனாகி புது வரலாற்றை படைத்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கப்பட்டு 2 வாரம் முடிவடைந்த நிலையில், நேற்று 3வது வாரம் தொடங்கியது. அப்போது இந்த வாரத்திற்கான கேப்டனாக யார் வரவேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ஆலோசித்து அவர்கள் அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் வலியுறுத்தினார்.
ரஞ்சித் vs தர்ஷிகா
இதையடுத்து பெண்கள் அணியிலிருந்து கேப்டனாக தர்ஷிகா 2ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்கள் அணியில் ரஞ்சித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் கண்களைக் கட்டிக் கொண்டு, விளையாடும் ஒரு கேமை பிக்பாஸ் பரிந்துரைத்தது. அந்த கேமில் தர்ஷிகா குறைந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.
வரலாறு படைத்த தர்ஷிகா
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 3வது வாரத்திலேயே 2 முறை கேப்டனாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தர்ஷிகா. கடந்த 7 சீசன்களில் ஒரே போட்டியாளர் 2 முறை கேப்டனாக இருந்திருந்தாலும் குறுகிய கால அளவில் மீண்டும் கேப்டனானது தர்ஷிகா தான்.
