ஆட்டத்தை ஆரம்பித்த சௌந்தர்யா.. செம கடுப்பான சுனிதா.. கேள்வி மேல் கேள்வி கேட்ட முத்துக்குமரன்.. தரமான சம்பவம் இருக்கு!
பிக்பாஸ் 18 ஆம் நாளின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சௌந்தர்யா பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் முத்துக்குமரன் Irresponsible மேனேஜர் ஜீரோ சதவீதம் கிரியேட்டிவிட்டி என கூறுகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சாச்சனா வெளியேற்றப்பட்டார். பின்னர் முதலாவது வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். மேலும் சர்ச்சைக்குள்ளாகிய அன்சிதா மற்றும் அர்னவ் பேசு பொருளாக இருந்து வந்தனர். இந்நிலையில் முந்தைய வார இறுதி எபிசோடில் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.
இரண்டாம் ப்ரோமோ
தற்போது பிக்பாஸ் 18 ஆம் நாளின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சௌந்தர்யா பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் முத்துக்குமரன் Irresponsible மேனேஜர் ஜீரோ சதவீதம் கிரியேட்டிவிட்டி என சௌந்தர்யாவை கூறுகிறார். இதற்கு பதில் அளித்த சௌந்தர்யா உங்கள் டாடியோட ஹோட்டல் தானே இது நீங்களே கிரியேட்டிவிட்டி கேட்டால் எப்படி என சொல்ல அதற்கு முத்துக்குமரன் அது என் பிரச்சனை இல்லையே என சொல்கிறார்.
டாடி கட்ன ஹோட்டலே அப்படித்தானா சார் என முத்துக்குமாரிடம் சௌந்தர்யா சொல்கிறார். அதற்கு முத்துக்குமரன் மேனேஜ் பண்ண வேண்டியது மேனேஜர் பொறுப்பு என சொல்ல அதற்கு சௌந்தர்யா நக்கலாக எல்லா இடத்திலேயும் நான் இருக்க வேண்டும் என்றால் நான் ஆவியாக தான் இருக்க வேண்டும் என சொல்கிறார்.