திரும்பத் திரும்ப தோத்துகிட்டே இருக்கிங்களேடா.. நாமினேஷன் பாஸில் கோட்டை விட்ட ஆண்கள் அணி!
பிக்பாஸ் நாமினேஷன் ஃபிரி பாஸிற்காக நடத்தப்பட்ட 3 போட்டிகளில் பெண்கள் அணி 2ல் வெற்றி பெற்று நாமினேஷன் ஃபிரி பாஸை தன் வசமாக்கியது.

விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என தொடங்கப்பட்டு, 3வது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது.
எலிமினேஷன்
இந்தப் போட்டியில், முதல் வாரம் ஃபேட் மேன் ரவீந்தரும், இரண்டாம் வாரம் அர்னவ்வும் எலிமினேட் ஆகினர். இதையடுத்து, 3வது வாரம் தொடங்கிய முதல் நாளே இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலை பிக்பாஸ் வெளியிட்டது. அதில் போட்டியாளர்கள் முத்துக் குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, பவித்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
நாமினேஷன் ஃபிரி பாஸ்
இவர்களை எலிமினேஷனில் இருந்து வெளியில் கொண்டுவர பிக்பாஸ் அனைத்து வாரமும் நாமினேஷன் ஃபிரி பாஸ் கேமை நடத்தி வந்தது. அதன்படி, வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.