ஃபுல்லா கம்ளையன்ட்.. திருட்டுப் பயலுக என திட்டிய முத்து.. மேனேஜரை மாற்றிய பிக்பாஸ்..
பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், ஹோட்டலின் மேனேஜரை மாற்றுமாறு பிக்பாஸ் கூறியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு நேற்றைப் போல இன்றும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டு அங்கு வாடிக்கையாளர்களாக வந்த ஆண்களை முடிந்த அளவு கடுப்பேத்தி இருப்பர்.
அடுக்கடுக்கான புகார்கள்
இந்நிலையில், இன்று நடந்த பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் போட்டியில், பிக்பா ஹோட்டல் குறித்து புகார்களை தெரிவிக்குமாறு பிக்பாஸ் அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்ட பலகை முழுவதிலும் போட்டியாளர்கள் புகார்களை எழுதினர்.
மேலும், சரியான ஒத்துழைப்பை தர ஹோட்டல் நிர்வாகம் தவறிவிட்டது, ஹோட்டல் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை என பெண்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கையில், முத்துக்குமரன் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள அவகாசம் வேண்டும் எனக் கூறினார்.