தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே'.. 31 நாட்களை நிறைவு செய்த அமரன்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

'நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே'.. 31 நாட்களை நிறைவு செய்த அமரன்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Dec 01, 2024, 08:13 AM IST

google News
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மக்களைக் கவர்ந்த இந்தப் படத்தை மக்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்கின்றனர். இந்தப் படத்தைப் பார்த்த பலரும், கண்ணீருடனே வெளிவருகின்றனர்.

நடிகர்களை கொண்டாடும் மக்கள்

பலரும், மேஜர் முகுந்தையும் அவரது மனைவி இந்துவையும் கண்முன் காட்டி நடித்த சிவகார்த்திகேயனையும் சாய் பல்லவியையும் கண்ணீர் மல்க பாராட்டினர். இதனால். தியேட்டருக்கு வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளதால், படம் 30 நாட்களாகியும் தியேட்டரில் இருந்து எடுக்கப்படாமல் இருந்தது.

கடந்த 30 நாட்களிலும் வெற்றிகரமாக இந்தப் படம் திரையரங்கில் மக்களின் ஆதரவைப் பெற்று 320 கோடிக்கும் மேல் வசூலைக் கடந்து சாதித்துள்ளது. இதனால், அமரன் படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமரன் திரைப்படத்திற்கு வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்த நடிகர்கள்

அமரன் திரைப்படம் வெளியான சமயத்தில், மக்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பையும், சாய் பல்லவியின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளினர். குறிப்பாக சாய் பல்லவி தன் முகத்தில் காட்டிய உணர்ச்சிகள் மூலம் அவர் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி இருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.

அடையாளத்தை மாற்றிய சிவகார்த்திகேயன்

அத்துடன், இதுவரை தமிழ் சினிமாவில் காமடி செய்யும் கலகலப்பான ஹீரோவாக பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோ என இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இது மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்ற கோணத்தில் பார்க்கச் சென்ற மக்கள், அந்தக் கதைக்குள் மூழ்கி கண்ணீருடன் வெளியே வந்தனர்.

திரும்பத் திரும்ப தியேட்டர் செல்லும் ரசிகர்கள்

தாங்கள் எதிர்பார்க்காத ஒன்றை அமரன் படம் வழங்கியதால், நாளுக்கு நாள் தியேட்டருக்கு சென்று அமரன் படம் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தை திரும்பத் திரும்ப வந்து தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களும் அதிகரிக்கத் தொடங்கினர்.

இதனால், நாளுக்கு நாள் அமரன் படத்தின் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில், வெளியான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அமரன் படத்தின் வசூலை பாதிக்குமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தை அடித்து நகர்த்தி தொடர்ந்து அமரன் முன்னேறி வந்தது.

ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு

இதனால், நவம்பர் மாத இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த அமரன் படம் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் படக்குழுவும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

வசூலில் கெத்து காட்டும் அமரன்

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 30 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 31 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 0.95 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ.164.69 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

இந்திய அளவில் பார்க்கும் போது படம் 31 நாட்களில் 245.25 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 324.25 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் வெளியிட்ட தகவலின் மூலம் தெரிகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி