வெற்றிகரமான 30வது நாள்.. சாதித்து காட்டிய அமரன்.. மறைந்த ராணுவ வீரரை கௌரவித்த மக்கள்..
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மக்களைக் கவர்ந்த இந்தப் படத்தை மக்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வந்து பார்த்து ரசிக்கின்றனர். இந்தப் படத்தைப் பார்த்த பலரும், கண்ணீருடனே வெளிவருகின்றனர்.
நடிகர்களை கொண்டாடும் மக்கள்
பலரும், மேஜர் முகுந்தையும் அவரது மனைவி இந்துவையும் கண்முன் காட்டி நடித்த சிவகார்த்திகேயனையும் சாய் பல்லவியையும் கண்ணீர் மல்க பாராட்டினர். இதனால். தியேட்டருக்கு வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளதால், படம் 30 நாட்களாகியும் தியேட்டரில் இருந்து எடுக்கப்படாமல் இருந்தது.