அண்ணான்னு மட்டும் சொல்லாத.. சிவகார்த்திகேயன் கதறல்.. ‘நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ மணிரத்னம் ஓபன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணான்னு மட்டும் சொல்லாத.. சிவகார்த்திகேயன் கதறல்.. ‘நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ மணிரத்னம் ஓபன் டாக்!

அண்ணான்னு மட்டும் சொல்லாத.. சிவகார்த்திகேயன் கதறல்.. ‘நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ மணிரத்னம் ஓபன் டாக்!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 06, 2024 10:32 PM IST

அமரன் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அண்ணான்னு மட்டும் சொல்லாத.. சிவகார்த்திகேயன் கதறல். ‘நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ மணிரத்னம் ஓபன் டாக்
அண்ணான்னு மட்டும் சொல்லாத.. சிவகார்த்திகேயன் கதறல். ‘நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ மணிரத்னம் ஓபன் டாக்

சாய் பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்

இந்த ஆடியோ விழாவில், சாய் பல்லவி குறித்து நாயகன் சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் சாய் பல்லவியின் பெயர் ஒரு பிராண்டாக மாறிவிட்டது என்று சிவகார்த்திகேயன் கூறினார். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தபோது எல்லோரையும் போல நானும் சாய் பல்லவியின் ரசிகனாகிவிட்டேன். 

சாய் பல்லவிக்கு போன் செய்து நடிப்பு நன்றாக இருப்பதாக கூறினேன். Anna Thank you so much anna.. என்றார். அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன். அப்ப நான் அம்மா ஸ்டாப்.. நாள் சாய் பல்லவிட்ட இல்ல.. மலர் டீச்சர்ட பேசுறதாவே நினைச்சு பேசிட்டு இருக்கேன். நீ மலர் டீச்சராவே பேசிரு.. அதுல வந்த மாதிரி மறந்து கூட போயிடு.. ஆனா அண்ணான்னு மட்டும் செல்லாதன்னேன்.. என்னைக்காவது ஒரு நாள் நாம இரண்டு பேரும் சேர்ந்து நடிக்குற சூழல் கூட வரலாம்ன்னு சொன்னேன் நான். அது இப்ப வந்துருக்கு. சாய் பல்லவியுடன் கண்டிப்பாக படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அமரன் மூலம் அது உண்மையாகிவிட்டது என்றார் சிவகார்த்திகேயன்

சினிமாவில் நுழையும் முன்

சாய் பல்லவி கதாநாயகி ஆவதற்கு முன்பு தான் சந்தித்ததாக அவர் கூறினார். சிவகார்த்திகேயன், தான் தொகுப்பாளராக பணியாற்றிய தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சாய் பல்லவி கலந்து கொண்டதை ஆடியோ விழாவில் நினைவு கூர்ந்தார். சாய் பல்லவி குறித்து சிவகார்த்திகேயன் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் பாராட்டு

அமரன் ஆடியோ விழாவில் சாய் பல்லவியை புகழ்ந்து இயக்குனர் மணிரத்னம் தள்ளினார். சாய் பல்லவியின் தீவிர ரசிகர் என்று மேடையில் அறிவித்தார். கண்டிப்பாக ஒருநாள் சாய் பல்லவியை வைத்து படம் பண்ணுவேன் என்று நம்புகிறேன் என்றார். மணிரத்னத்தின் கருத்துகளால் உணர்ச்சிவசப்பட்டார் சாய் பல்லவி.

மணிரத்னம் பெயர் மட்டும்தான் தெரியும்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பு மணிரத்னத்தைத் தவிர வேறு எந்த இயக்குநரின் பெயரும் தனக்குத் தெரியாது என்று சாய்பல்லவி கூறினார். இயக்குனர்களில் மணிரத்னத்தின் பெயர் எனக்கு அதிகம் வரும். மணிரத்னத்தின் இன்ஸ்பிரேஷன்தான் திரைக்கதை மற்றும் கதாபாத்திரத் தேர்வில் நான் வித்தியாசமான நடவடிக்கைகளை எடுக்கக் காரணம் என்றார் சாய்பல்லவி.

ராணுவ மேஜரின் வாழ்க்கை

சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற 31 வயதில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் இப்படத்தில் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் வெளியாகும் அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.