தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நா மறுபடியும் சீரியல்ல நடிக்க வர்றேன்.. மூட்டையெல்லாம் தூக்கி.. பிச்சையெடுத்தேனா.. மெட்டி ஒலி விஷ்வா ஓபன் டாக்

நா மறுபடியும் சீரியல்ல நடிக்க வர்றேன்.. மூட்டையெல்லாம் தூக்கி.. பிச்சையெடுத்தேனா.. மெட்டி ஒலி விஷ்வா ஓபன் டாக்

Oct 17, 2024, 03:57 PM IST

google News
எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகணும்ன்னு சொல்ல முடியாது இல்லயா.. எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது.. அது மாதிரிதான்.. அதுனால நான் குறைச்சேன்.. ஒரு பீரியட்ல எனக்குமே ஒரு சில வேலைகள்.. வேற வேற பிஸ்னஸ்ல கான்சன்ட்ரேஷன் பண்ண வேண்டி இருந்ததால அது அப்படியே குறைந்து கடைசில பொன்னூஞ்சலோட முடிஞ்சுடுச்சு அது. (Vishwa (Facebook))
எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகணும்ன்னு சொல்ல முடியாது இல்லயா.. எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது.. அது மாதிரிதான்.. அதுனால நான் குறைச்சேன்.. ஒரு பீரியட்ல எனக்குமே ஒரு சில வேலைகள்.. வேற வேற பிஸ்னஸ்ல கான்சன்ட்ரேஷன் பண்ண வேண்டி இருந்ததால அது அப்படியே குறைந்து கடைசில பொன்னூஞ்சலோட முடிஞ்சுடுச்சு அது.

எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகணும்ன்னு சொல்ல முடியாது இல்லயா.. எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது.. அது மாதிரிதான்.. அதுனால நான் குறைச்சேன்.. ஒரு பீரியட்ல எனக்குமே ஒரு சில வேலைகள்.. வேற வேற பிஸ்னஸ்ல கான்சன்ட்ரேஷன் பண்ண வேண்டி இருந்ததால அது அப்படியே குறைந்து கடைசில பொன்னூஞ்சலோட முடிஞ்சுடுச்சு அது.

தமிழில் எத்தனை சீரியல்கள் வந்தந்தாலும் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு தனி இடம் தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்றும் அந்த மெட்டி ஒலியை மறக்க முடியாது . அது 811 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் செல்வமாக நடித்த விஷ்வாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சின்னத்திரையை விட்டு முற்றிலும் விலகி விட்டார். இந்நிலையில் Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

இன்னொரு மெட்டி ஒலி வேணும்..

கேள்வி : நிறைய சீரியல்களில் நடித்த நீங்க இவ்ளோ நாள் எங்க போயிட்டீங்க..சடனா ஏன் காணாம போயிட்டீங்க?

பதில் : சடனா காணமாம போகல மெட்டி ஒலி பண்ணதுக்கு அப்பறமா இன்னொரு மெட்டி ஒலி வேணும்.. அட்லீஸ்ட் இன்னொரு மெட்டி ஒலி ஸ்டேண்டடுல ஒன்று வேணும்ன்னு நினைச்சதால கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கிட்டு வந்தேன். அதுக்காக எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகணும்ன்னு சொல்ல முடியாது இல்லயா.. எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது.. அது மாதிரிதான்.. அதுனால நான் குறைச்சேன்.. ஒரு பீரியட்ல எனக்குமே ஒரு சில வேலைகள்.. வேற வேற பிஸ்னஸ்ல கான்சன்ட்ரேஷன் பண்ண வேண்டி இருந்ததால அது அப்படியே குறைந்து குறைந்து கடைசில பொன்னூஞ்சலோட அது முடிஞ்சுடுச்சு.

கேள்வி : யூடியூபர்ஸ் சொல்ற அல்லது சோஷியல் மீடியாவில் இருக்கவங்க சொல்ற ஒரு பயங்கரமான ஆக்டர் திடீர்ன்னு காணாம போயிட்டாங்க அப்படின்னா நிறைய விஷயங்கள் அவங்களே கற்பனையா ஒரு தம்நெயில் போட்டு ஒரு வீடியோ போட்டுபண்ணிடுவாங்க

பதில்: (சிரிக்கிறார்) மத்தவங்கள பத்தியும் நிறைய பார்த்திருக்கிறேன். என்னை பத்தியும் பார்த்திருக்கிறேன். நா மூட்டையெல்லாம் தூக்கி இருக்கேனே.. நா காசுக்கு கஷ்டப்பட்டு பிச்சையெடுக்குறேன். செத்து போயிட்டேன்.. சினிமா வாய்ப்பு இல்லாததால நா செத்து போயிட்டேன்னு சொல்லிருக்காங்க. நா ஏதோ சினிமா வாய்ப்பு தேடி புரொடியூசர் வீடு வீடா போய் நின்ன மாதிரி சொல்லிருக்காங்க.. நா என்னைக்குமே சீரியல் வாய்ப்பயே போய் தேடல நா எங்க போய் சினிமா வாய்ப்ப தேடுறது. தமாஷா இருக்கும்.

மறுபடியும் சீரியல்ல நடிக்க வர்றே

கேள்வி: நீங்களே உங்கள பத்தி ஒரு ரூமர் ஸ்ப்ரெட் பண்டறதுனா என்ன சொல்லுவீங்க

பதில் : நா மறுபடியும் சீரியல்ல நடிக்க வர்றே (ரூமர்)

கேள்வி : நீங்க நடித்த கார்த்திக் அண்ட் ஆனந்தி கப்பிள்.. நீங்க ரீசெண்ட்டா அவங்கள மீட் பண்ணீங்களா.. சான்ஸ் கிடைத்ததா

பதில்: மஞ்சரிய மீட் பண்ணல.. அவங்க சிங்கப்பூர்ல செட்டில் ஆகிட்டாங்க. அடிக்கடி பேசியிருக்கே.. இப்ப 2 மாசத்திற்கு முன்னாடி கூட பேசினே.. அவங்களும் இங்க வந்த கிட்டத்தட்ட 10 வருசத்துக்கிட்ட மேல இருக்கும்ன்னு நினைக்குறேன். ஆனா வெரி நைஸ் ப்ரெண்ட்.

விஜய் சார்கிட்ட நீங்க ஒரு கேள்வி கேட்கணும் என்றால் என்ன கேட்பீங்க

விஜய் சார் மிகச் சிறந்த ஸ்டார். ஆக்டர் வேற ஸ்டார் வேற.. நல்லா நடிச்சு அவார்டு வாங்குறவன் ஆக்டர். ஸ்டார் அப்படின்றவர் வந்து ஒரு பெரிய மாஸா தன் கண்ட்ரோல் வச்சுருக்குறவன். ஒரு படம் ரிலீஸ் ஆச்சுனா கோடான கோடி போர் வந்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குறாங்கனா அவர் ஒரு பெரிய ஸ்டார்ன்னு அர்த்தம். அத அச்சீவ் பண்றது கஷ்டம். நல்லா நடிச்சிடலாம் யார் வேணும்னாலும். அந்த வகையில் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.  ஆனால் விஜய் சார்  TVK லீடரா இதுவரைக்கும் அவர் ஒன்றும் சொல்லல.. அதுனால் இவ்ளோ நாள் பண்ணாதத என்ன பண்ண போறீங்கன்னு வேணா கேட்கலாம்.

கேள்வி : ரஜினி சார்ட்ட என்ன கேட்பீங்க

பதில் : என்ன கேட்க முடியும்.. அவர பார்த்து தான் சினிமான்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டோம். சினிமாவுக்கு போக ஆரம்பிச்சதே அவர பார்த்து தான். என்ன கேட்கலாம். ஒன்னே ஒன்னு கேட்கலாம். நடிக்கிறத நிறுத்தவே நிறுத்தாதீங்க சார். நூத்தி ஐம்பது வயதானாலும் நீங்க நடிக்கணும் சூப்பர் ஸ்டாராக நடிக்கணும். அதுல நீங்க லாஜிக்கே தேடாதீங்க. அவர் எப்படி 100 பேரை அடிச்சாரு அவர் எப்படி வந்து இந்த வயசுலயும் வந்து எப்படி இருக்கிறார். அந்த லாஜிக் எல்லாம் தேடாதீங்க த்ரி ஹவர்ஸ் படம் போறது தெரியாம ஒரு என்டர்டெயிண்மென்ட் உங்களால மட்டும் எப்படி கொடுக்க முடியுது. ஏன்னா அந்த வயசுல நம்மளால நடமாட முடியுமானு தெரியல. அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது சீக்ரெட் என்ன அப்படின்னு வேணா கேட்கலாம்.

கேள்வி : கமலஹாசனிடம் என்ன கேட்பீர்கள் பதில் : பதில் : ஆஸ்கர் எப்ப சார்.. வி ஆர் வெயிட்டிங்.. என்ன பொறுத்த வரை அவரை ஒரு நடிகராக மட்டும் தான் பார்க்கிறேன். அதற்கு வெளியே அவர் எங்க போயிருக்கிறார் என்பதை நான் பார்க்கவில்லை. ஒரு திரைக்கலைஞனாக கமல் சார்ட்ட அத மட்டும் தா கேட்பேன்.

கேள்வி : உங்க பிரெண்ட் தீபக்கிட்ட என்ன கேட்பீங்க

பதில் : மச்சான் அடுத்து எப்படா மீட் பண்ணுவோம்.

கேள்வி : நடிகர் விஷ்வாவிடம் என்ன கேட்பீர்கள்

பதில்: உனக்கு புத்தியே வராதாடா

இது போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்மான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை