சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன்.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்துமா? 2 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?
Vettaiyan Box Office Day 2: வேட்டையன் படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

தசரா விடுமுறை ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் வேட்டையன் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 25 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் வெளியாகின.
Sacnilk.com படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 25.27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கு ஆக்கிரமிப்புக்கு வரும்போது, தமிழில் 53.96% ஆகவும், தெலுங்கில் 34.15%, இந்தியில் 8.11% மற்றும் கன்னடத்தில் துறையில் 10.79% என இருந்துள்ளது.
தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது கம்மிதான்
கடந்த மாதம் வெளியான தளபதி விஜய்யின் தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது கம்மிதான் என கூறப்படுகிறது. தி கோட் படம் முதல் நாளில் ரூ. 25.55 கோடி வசூலித்து இருந்தது. அத்துடன் வழக்கமான ரஜினி படத்துக்கான ஓபனிங் வேட்டையன் படத்துக்கு இல்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், இன்றும் நாளையும் வரை பேமிலி ஆடியன்ஸ் வருகையும் இருக்கும் என்பதால் வேட்டையன் படத்தின் வசூல் நிலவரம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
