Manjari: “எனக்கு அந்த நோய் இந்த நோய் இருக்குன்னு எழுதி.. பொழப்புல மண்ண அள்ளி போடுறேன்னு சொல்வாங்க” - மஞ்சரி பேட்டி
Manjari: “என்னுடைய தோற்றத்தைப் பார்த்து எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பல்வேறு விதமாக எழுதினார்கள்” - மஞ்சரி பேட்டி
தமிழ் சீரியல்களில் இன்று கிளாசிக்காக பார்க்கப்படும் சீரியல் கோலங்கள். நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியலில் ஆனந்தி கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் தேவயாணியின் தங்கையாக நடித்திருந்தவர் நடிகை மஞ்சரி. இவர் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார்.
அந்த பேட்டியில் நடிகை மஞ்சரி பேசும் போது, “நான் உடல் எடையை குறைத்தவுடன் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பல பேர், பலவிதமாக எழுதினார்கள்.ஆனால் அதற்கெல்லாம் நான் ஒரு முறை கூட பதில் அளிக்கவில்லை. காரணம் என்னவென்றால், அது அவர்களுடைய மனம் அவர்களுடைய எண்ணம். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.
எனக்கு கவலையில்லை
பல பேர் எனக்கு அது தொடர்பான மெசேஜ்களை அனுப்பி, உன்னை பற்றி எப்படி எல்லாம் எழுதி இருக்கிறார்கள் பார் என்று கூறினார்கள். அதற்கு நான் போட்டால் போட்டுக் கொள்ளட்டும். அது எனக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி தான் என்று கூறினேன். உண்மையில், அந்த விதத்திலாவது நான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேனே என்ற விதத்தில் நான் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தேன்.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் என்பது மிகவும் இயல்பான விஷயம். சில காரணங்களால், நமக்கு தொழில் இருந்து ஒரு பிரேக் தேவைப்படுகிறது என்றால், பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், நாம் திரும்பி வரும் போது, அது செமையாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்.
உண்மைதான்
எழுத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது உண்மைதான். நான் நிறைய எழுதிக் கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் இப்போது நான் எழுவது இல்லை. நான் இப்போது எனக்கான சூழ்நிலையில் மிகவும் நன்றாக இருக்கிறேன். தற்போது எழுதுவதற்கு என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களது வேலையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.
நாம் அப்படி வந்தால், நீ ஏன் எங்களுடைய வேலையில் மண்ணை அள்ளி போடுகிறாய் என்று கேட்பார்கள். என்னை நன்றாக தெரிந்து, என்னுடைய எழுத்து பிடித்து, யாராவது என்னிடம் வந்து கேட்டால், நிச்சயமாக அவர்களுக்கு நான் எழுதுவேன்.
நிறைய பேர் என்னிடம் சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டீர்களா என்று கேட்கிறார்கள். உண்மையில் என்னுடைய பூர்வீகமே சிங்கப்பூர்தான். அவர்கள் அப்படி கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். காரணம், நான் இந்தியாவில் நடித்தால் இந்திய நாட்டுக்காரி ஆகி விடுவேனா என்ன?” என்று பேசினார்
முடி எங்கே போனது?
மேலும் பேசிய அவர், “ ‘சில்ட்ரன் கேன்சர் சொசைட்டி’ என்ற ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கான சிகிச்சையில் அவர்கள் ஈடுபடும் பொழுது, அவர்களது முடி அனைத்தும் உதிர்ந்து விடும். அதனால் தங்களுக்கு முடி இல்லையே என்று அவர்கள் வருத்தப்படுவார்கள்.
அவர்களுக்காகவே நிறைய பேர் தங்களது முடியை தானமாக கொடுப்பார்கள். அங்கு கொடுக்கப்படும் முடியானது விக்காக செய்யப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும். அந்த சேவைக்காகத்தான் நான் என்னுடைய முடியை கொடுத்து இருக்கிறேன்.
கடவுளிடமும் ஒரு வேண்டுதல்
கூடுதலாக, எனக்கும் கடவுளிடமும் ஒரு வேண்டுதல் இருந்தது. அந்த வேண்டுதலின்படி கடவுளிடம், உங்களுக்கு இந்த முடியை கொடுப்பதை விட, கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த முடியை நான் கொடுக்கிறேன். கோயிலில் கொடுப்படும் முடியானது குப்பைத் தொட்டிக்குதான் செல்லும். அதுவே அவர்களிடம் கொடுத்தால், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறும் என்று கூறி கொடுத்து விட்டேன்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்