TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tvk Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 04, 2024 11:32 AM IST

TVK Vijay: அவர்களுக்கு புரிய வைப்போம். நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை. மாநாடு ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்குபவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்
TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான தளபதி விஜய் எழுதிய கடிதத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம்

உங்களை நானும், என்னஐ நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.

தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றி காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.

இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டு திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால் நம் அரசியல் கள பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் இது நம்முடைய கொள்கை திருவிழா.

அதுவும் வெற்றி கொள்கை திருவிழா. இப்படி செல்லும்போதே ஓர் எழுச்சி உணர்வு நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.

இந்த வேளையில் ஒன்றே, ஒன்றை மட்டும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பான மனிதனைத்தான் குழப்பம் பாதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாக திகழும் மனிதனைத்தான மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்குபவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

பக்குவம் நிறைந்தவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும்

நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும்படை. இளஞ்சிங்க படை. சிங்க பெண்கள் பை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப்படை.

ஆகவே நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால் படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமல்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிருபித்து காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரிசயல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும்போதுதான் அவர்களுக்கு புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று, வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்ற காண போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.

எதார்த்தத்தை விட எச்சரிக்கை முக்கியம்

மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் கள பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது, மேலும் எதார்த்தமாக இருப்பதை விட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும், உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் மாநாட்டு பணிகளை தொடங்கி தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்

மாநாட்டு பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகளை தொடர வாழ்த்துகிறேன்.

மாநாட்டுக்கான நாள்களை மனம் எண்ண தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்க போகும் சந்தோச தருணங்களை இப்போதே மனம் அளவிட தொடங்கிவிட்டது.

வி.சாலை எனும் வெற்றி சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். அன்புடன் விஜய்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.