தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நடிகை.. 18 வருடங்களுக்குப் பின் குழந்தையுடன் வந்து ஷாக்..
Oct 25, 2024, 03:33 PM IST
பாரிஜாதம் திரைப்பட நடிகை சரண்யா பாக்கியராஜ், காதல் தோல்வியால் தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவருக்கு தற்போது குழந்தை இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராகவும், நடிகராவும் இருந்து வருபவர் பாக்கியராஜ். இவர் குடும்பம் முழுவதும் சினிமாவை சார்ந்தே இருக்கின்றனர்.
பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா திரைப்பட நடிகை, மகள் சரண்யாவும் பாக்கியராஜின் பாரிஜாதம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மகன் சாந்தனு சிறு வயது முதலே தந்தையுடன் இணைந்து நடித்து வந்தார். பின், அவர் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
18 வருடங்களுக்கு பின் தெரிந்த சரண்யா
இப்படி குடும்பம் முழுவதும் சினிமாவை சார்ந்த தொழிலை செய்து வந்த நிலையில், பாரிஜாதம் திரைப்படத்திற்குப் பின் சரண்யா வேறு எந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. இவருக்கு திருமணம் ஆனதாகவும் எந்த செய்திகளும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் இவருடைய பெயரும் காணமல் போயிருந்தது
இந்நிலையில், நடிகை சரண்யா பாக்கியராஜ் 18 வருடங்களுக்குப் பின் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், கடந்த 18 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்தும் பேசியிருந்தார்.
சினிமாவை விட்டு செல்லவில்லை
தான் சினிமாவில் இருந்து விலகவில்லை. நடிப்பதை மட்டும் தான் தவிர்த்தேன். எனக்கான நல்ல படத்திற்காக காத்திருந்தேன். மற்றபடி, என் தந்தையின் படங்களுக்கு எல்லாம், உதவி செய்து கொண்டிருந்தேன். சினிமாவில் நான் காஸ்டியூம் டிஸைனராக பனியாற்றி வருகிறேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சினிமாவில் இருந்து விலகவில்லை என்பது தெரியும். இப்போதும் நான் நடிக்கத் தயாராகத் தான் இருக்கிறேன் எனக் கூறினார்.
சாந்தனு எனது நண்பன்
மேலும், எனக்கும் என் தம்பி சாந்தனுவிற்கும் மிகவும் குறைவான வயது வித்யாசம் என்பதால் நாங்கள் இருவரும் நண்பர்கள் போலத்தான் இருப்போம். நாங்கள் அனைத்து விஷயத்திற்கும் சண்டை போடுவோம் எனவும் கூறியிருந்தார்.
குழந்தை தான் உலகம்
இந்நிலையில், தான் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் தற்கொலைக்கு முயன்றேன். அதை அறிந்த எனது குடும்பத்தினர் என்னை அதிலிருந்து காப்பாற்றினர். இப்போது எனக்கென குழந்தை இருக்கிறது. அவன் தான் என் உலகம். அவனைக் கவனிப்பதிலே எனக்கான நேரம் செல்கிறது. வேலைக்கு போனால் கூட அவனது நியாபகம் என்னை விடாமல் துரத்துகிறது. அப்போதெல்லாம், நான் வேலையை விட்டுவிட்டு அவனை கவனிப்பேன். அந்த சமயத்தில் என் அம்மா என்னையும், என் தம்பியையும் எப்படி பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை உணர்ந்தேன் எனக் கூறியிருந்தார்.
பரவும் வதந்தி
இந்த பேட்டி வைரலான நிலையில், இன்னும் திருமணம் ஆகாத இவருக்கு எப்படி குழந்தை பிறந்தது. அமெரிக்காவிற்கு படிக்க சென்ற இவர், அங்கு ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் அவர் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் செய்ததாகவும் பல வதந்திகள் பரவி வருகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்