டாப் 10 சினிமா.. சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. திஷா பதானி ஹாட் லுக்.. பார்க்கிங் பட இயக்குநருடன் இணையும் எஸ்.கே!
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல், திஷா பதானி வெளியிட்ட ஹாட் லுக் போட்டோஸ், பார்க்கிங் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

'தண்டகாரண்யம்' படத்தின் முதல் பாடலான 'அடியே அலங்காரி' வெளியானது!
தண்டகாரண்யம் படத்தின் முதல் சிங்கள் பாடலான அடியே அலங்காரி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ப.ரஞ்சித்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்த இளம் நடிகர்கள் தான் அட்டகத்தி தினேஷ் மற்றும் , கலையரசன். இவர்களது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவர்களுக்கும் நல்ல பெயரை எடுத்துக்கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த இரு நடிகர்களும் தற்போது ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தமான படமே தண்டகாரண்யம் . அதியன் ஆதிரை இயக்கி வரும் இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீளம் புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.
தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்; புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. மருத்துவமனைக்கு முதல்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதித்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தவிட்டார்.
அமரன் படம் ட்ரைலர் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி உள்ள திரைப்படமே அமரன். சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.