Poornima bhagyaraj: முதல் மனைவி பிரிந்த சோகம்;துவண்டு நின்ற பாக்யராஜ்;25 படங்களை தூக்கி எறிந்த பூர்ணிமா!-poornima bhagyaraj latest interview about how director bhagyaraj proposed her family his love - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Poornima Bhagyaraj: முதல் மனைவி பிரிந்த சோகம்;துவண்டு நின்ற பாக்யராஜ்;25 படங்களை தூக்கி எறிந்த பூர்ணிமா!

Poornima bhagyaraj: முதல் மனைவி பிரிந்த சோகம்;துவண்டு நின்ற பாக்யராஜ்;25 படங்களை தூக்கி எறிந்த பூர்ணிமா!

Jun 02, 2024 08:01 PM IST Kalyani Pandiyan S
Jun 02, 2024 08:01 PM , IST

Poornima bhagyaraj: அதை அவர் கல்யாணத்திற்கு பிறகு என்னிடம் சொன்னார். அதனால்தான் கல்யாணத்தை வீட்டில் சொன்ன, ஆறு மாதத்தில் நடத்த வேண்டும் என்று நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டது. - பூர்ணிமா பாக்யராஜ் 

பிரபல நடிகையான பூர்ணிமா தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான பாக்யராஜூடன் ஏற்பட்ட காதல் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். அப்போதே முடிவு செய்து விட்டார் அவர் பேசும் போது, “என்னை அவர் பார்க்கும் போதே என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்திருக்கிறது. அவரது முதல் மனைவி இறந்த பின்னர் அவர் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்று நினைத்தார். காரணம், அவர் அந்த சமயத்தில் டாப் இயக்குநர்களின் பட்டியலில் இருந்தார். மனது மாறுவதற்குள் நாம் இன்னொரு கல்யாணத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். அப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னை அவர் மும்பையில் சந்தித்தது அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. இதனையடுத்துதான் அவர் எங்களுடைய குடும்பத்திடம் வந்து என்னை பெண் கேட்டார்.  

(1 / 4)

தூது விட்ட நடிகைகள்அந்த சமயத்தில் அவரை கல்யாணம் செய்து கொள்ள பல நடிகைகள் தூது விட்டார்கள். அதை அவர் கல்யாணத்திற்கு பிறகு என்னிடம் சொன்னார். அதனால்தான் கல்யாணத்தை வீட்டில் சொன்ன, ஆறு மாதத்தில் நடத்த வேண்டும் என்று நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டது. நான் அப்போது கிட்டத்தட்ட 25 திரைப்படங்களில் புக் ஆகியிருந்தேன். 

(2 / 4)

அனைத்து படங்களுக்கான அட்வான்ஸ் தொகையும் என்னிடம் தான் இருந்தது. இந்த நிலையில் திடீரென்று கல்யாணம் என்று முடிவான பின்னர், அந்த படங்கள் அனைத்தையும் நான் கேன்சல் செய்துவிட்டு, அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். 

(3 / 4)

காரணம் என்னவென்றால், அவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்த நான்  அந்த காலகட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். ஆகையால் திருமண வாழ்க்கையில் நுழைந்த பின்னர், அந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் நான் அப்படி ஒரு கடினமான முடிவை அந்த சமயத்தில் எடுத்தேன். இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் முன்னாள் கூட நான் நடித்துக் கொண்டுதான் இருந்தேன்.” என்று பேசினார்.

(4 / 4)

மற்ற கேலரிக்கள்