தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kiki, Shanthanu Opens About Not Having Baby For Past Eight Years

Kiki, Shanthanu : ‘எப்பவும் குழந்தை கேட்கிறாங்க.. எங்களுக்கு தெரியும்..’ கடுப்பான சாந்தனு, கிகி ஜோடி!

Aarthi Balaji HT Tamil
Feb 02, 2024 10:48 AM IST

திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்தும் சாந்தனு, கிகி ஏன் குழந்தை பற்றி யோசிக்கவில்லை என கூறினர்.

சாந்தனு, கிகி
சாந்தனு, கிகி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் பாக்யராஜ் . அதுமட்டுமின்றி, நடிப்பில் பல்வேறு பிளாக் பஸ்டர் ஹிட்களை கொடுத்த பாக்யராஜ் , நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதியருக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார். தன்னைப் போல் தன் மகனும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய பாக்யராஜ் , சக்கரகட்டி படத்தின் மூலம் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் . இதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை படத்தில் நடித்து இருந்தார்.

 அதன் பிறகு சித்து ப்ளஸ் 2, அம்மாவின் கைபேசி, ராவணகோட்டம் என பல படங்களில் நடித்தாலும் வெற்றி அவருக்கு வரமாக அமைந்தது. 

இந்நிலையில், அவரது நீண்ட காத்திருப்புக்கு இறுதியாக முதல் வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி ஜெய்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான புளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது. 

சமீபத்தில் படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது. இதற்கிடையில், ப்ளூ ஸ்டாரின் வெற்றிக்குப் பிறகு தனது தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தது தனக்கு மிகுந்த திருப்தியை அளித்ததாக சாந்தனு கூறுகிறார். 

நடிகர் சாந்தனு 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் கிகி என்ற கீர்த்தனாவை காதலித்தார் . தொகுப்பாளினியாக வலம் வருகிறார் கீர்த்தி. பள்ளி படிக்கும் போது முதல் காதலித்து இறுதியாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தியுடன் ஜோடியாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சாந்தனு , குழந்தை இல்லாததால் தாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து கவலை தெரிவித்தார். 

ஆனா, கல்யாணம் ஆன பிறகு குழந்தையைப் பற்றிக் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதே சமயம் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது அந்த நேரத்தில் நடக்கும் என்றார். இதற்குப் பிறகு, அவர்கள் எந்தத் திட்டத்திலும் இல்லை என்று கீர்த்தி கூறினார். எது வரப்போகிறதோ அது உரிய நேரத்தில் வந்து சேரும். இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என எதுவும் நினைக்கவில்லை. சில விஷயங்கள் நடக்கும் போது நடக்கும் “ என சாந்தனு, கிகி கூறினர். 

முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாந்தனு, " நாங்கள் முதலில் காதலித்தோம். பின்னர் பிரிந்தனர். சுமார் எட்டு வருடங்கள் பிரிந்திருந்தோம். அந்த நேரத்துல சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டே இருப்போம்”என்றார் சாந்தனு.

உடனே கிகி, “அந்த காலம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் என் நண்பர் ஒருவர் அழைத்தார். சாந்தனு மற்றொரு பெண்ணுடன் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருப்பதாக சொன்னார். உடனே சாந்தனுவுக்கு போன் செய்தேன். சாந்தனு தன் தந்தையுடன் இருப்பதாகக் கூறினார். அப்படி தான் இத்தனை நாளாக நாங்கள் செய்த சின்னச் சின்ன சண்டைகள் பெரிய சண்டையாக மாறியது. அதன் பிறகு நாங்கள் பிரிந்தோம்.

எட்டு வருடங்கள் வித்தியாசம். இதற்கிடையில் ஒரு மேடையில் இருவரும் சேர்ந்து நடனமாட வேண்டிய சூழ்நிலை வந்தது. அன்று நாங்கள் ஒன்றாக நடனமாடினோம். அதோடு நாங்கள் மீண்டும் நெருங்கிவிட்டோம். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்" என்றார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.