'பிரிந்து சென்ற ஜோடிகள் என்னால் இணைந்தார்கள் ' - பாக்கியராஜ் பெருமிதம்
இயக்குநர் பாக்கியராஜின் ' மௌன கீதங்கள் ' திரைப்படம் பார்த்துவிட்டு விவாகரத்தாகி பிரிந்து சென்ற ஜோடிகள் ஒன்று சேர்ந்ததாக கூறியுள்ளார்.
1981 ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கி, நடித்த திரைப்படம் , ' மௌன கீதங்கள் ' . இதில் பாக்கியராஜுக்கு ஜோடியாக சரிதா நடித்து இருந்தார். இவர் தன் கணவராக நடித்த பாக்கியராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டு விவாகரத்தாகிப் பிரிந்து சென்று விடுகிறார்.
பிறகு இவர்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்தே படத்தின் கதையாகும். இதை மிகவும் சுவாரஸ்யமாக இயக்குநர் பாக்கியராஜ் படமாக்கி இருப்பார். படம் வெளியான அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சொல்லப் போனால் பாக்கியராஜ் படங்களில் விரும்பான படம் லிஸ்டில் மக்கள் இந்த படத்தை இன்றைய நாள் வரை வைத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் ' மௌன கீதங்கள் ' படம் குறித்து சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ் பேசி இருந்தார். அவர் கூறுகையில் , ” ' மௌன கீதங்கள் ' திரைப்படம் பார்த்ததுவிட்டு படம் வெளியான நேரத்திலேயே இரண்டு, மூன்று விவாகரத்தான ஜோடிகள் என்னைத் தேடி வந்து பார்த்துச் சென்றார்கள்.
அவர்கள் அந்த படத்தை பார்த்த பிறகு தான் , தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தோம் . படம் பார்த்த பிறகு தாங்கள் பிடிவாத குணத்தை மாறிக் கொண்டோம். இதை உங்களை நேரில் பார்த்து சொல்லிவிட்டு செல்லாம் என நினைத்து நாங்கள் வந்தோம் என கூறினார்கள்..
சொன்ன போனால் அந்த படத்தால் , உண்மையில் இவ்வளவு பெரிய தாக்கம் மக்கள் மனதில் உண்டாகும் என நானும் என் படக்குழுவும் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை. ' மௌன கீதங்கள் ' படத்தில் இன்னொரு பாதிப்பான விஷயம் இருப்பதை யாரும் நோட் செய்யவில்லை.
அந்த படத்த்கில் நான் ஒரு தப்பு செய்து இருப்பேன். பொண்டாட்டி இருக்கும் போது நான் வரை விட்டுட்டு மற்றொரு பொண்ணோட சகவாசம் வைத்திருப்பேன். நியாயமாகப் பார்த்தால் மக்கள் என்னைத் தான் திட்டி இருக்க வேண்டும் .
ஆனால் ஏன் என்று தெரியவில்லை மக்கள் சரிதாவைத் தான் திட்டிக்கிட்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு தடவை கணவர் தெரியாமல் தப்பான பாதைக்கு சென்று விட்டார் அதற்காக மனைவி எதற்காக இப்படி கணவரை விட்டுவிட்டாள்.
இந்த பொண்ணு இப்படி செய்வது சரியா என படம் பார்த்தவர்கள் சொன்னார்கள். இதில் என்ன சோகம் என்றால் இதை பேசியதே பெண்கள் தான். நியாயமாகப் பார்த்தால் பெண்களே இப்படிப் பேசுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை “ என தெரிவித்து இருக்கிறார் பாக்கியராஜ்.