தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Gautham Karthik Interview About After Marriage

Gautham karthik: ‘எல்லாரும் சிரிக்கிறாங்க..’ கவுதம் கார்த்திக் ஃபீல்!

HT Tamil Desk HT Tamil

Mar 28, 2023, 06:30 AM IST

‘என்ன இருந்தாலும், அவங்க ஒரு நடிகை, நான் ஒரு நடிகன். ஆலோசனைகள் வேறு, முடிவு வேறு. எனக்கான ஸ்கிரிப்ட் வரும் போது, அவற்றை நான் தான் முடிவு செய்கிறேன்’
‘என்ன இருந்தாலும், அவங்க ஒரு நடிகை, நான் ஒரு நடிகன். ஆலோசனைகள் வேறு, முடிவு வேறு. எனக்கான ஸ்கிரிப்ட் வரும் போது, அவற்றை நான் தான் முடிவு செய்கிறேன்’

‘என்ன இருந்தாலும், அவங்க ஒரு நடிகை, நான் ஒரு நடிகன். ஆலோசனைகள் வேறு, முடிவு வேறு. எனக்கான ஸ்கிரிப்ட் வரும் போது, அவற்றை நான் தான் முடிவு செய்கிறேன்’

நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனும், நடிகை மஞ்சிமா மோகனின் கணவருமான கவுதம் கார்த்திக், பிரபல தொலைக்காட்சி அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

Shaitaan OTT: 4 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹாரர் த்ரில்லர்.. ஓடிடிக்கு வரும் சைத்தான்!

Nepolean: நடிகர் சங்க கட்டிடம்.. நிதியுதவி கொடுத்த நெப்போலியன்.. எவ்வளவு தெரியுமா?

Samantha: ரூ.72 லட்சம் ஜாகுவார் முதல் ரூ 2.26 கோடி லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வரை.. சமந்தாவின் ஆடம்பர கார் பட்டியல்

Madan Patti Rangaraj: வெங்கடேஷ் பட்டிற்கு மாற்று இவனா?…சின்னப் பையனப் போய்.. - வன்ம வசைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்

‘‘திருமண வாழ்க்கை செம்மயா போய்டு இருக்கு. என் காதல் மனைவி, என்னுடைய பெரிய பலமே அவள் தான். எப்போதும் நான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவள், அதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. அவள் நிறைய கஷ்டங்களை பார்த்திருக்கிறாள். நான் அவளுக்கு ஒரு துணையா நிற்க ஆசைப்படுகிறேன். இது ஒரு அழகான எண்ணம் இல்லையா!

அவள் என்னிடத்திலும், நான் அவளிடத்திலும் அப்படி தான் ஆசைப்படுகிறோம். இது ஒரு அழகான கூட்டணி. என்னுடைய இந்த 10 ஆண்டு பயணம், நம்ப முடியாததாக உள்ளது. என்னுடைய தொடக்கமே பிரமாண்டமாக இருந்தது. அதன் பின் நிறைய ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தது தான். ஒவ்வொரு முறை சரிவு வரும் போது, புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. 

மக்கள் என்ன மாதிரி ரோல் பண்ணாலும், என்னை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியானது தான். என்னுடைய மனைவி தான், என்னுடைய பார்ட்னர். என் தொடர்பான எல்லாவற்றையும் என் மனைவியிடம் ஆலோசிக்கிறேன். அப்படி தான் ஒரு ஸ்கிரிப்ட் வரும் போது, அதையும் என் மனைவியிடம் ஆலோசிக்கிறேன். 

என்ன இருந்தாலும், அவங்க ஒரு நடிகை, நான் ஒரு நடிகன். ஆலோசனைகள் வேறு, முடிவு வேறு. எனக்கான ஸ்கிரிப்ட் வரும் போது, அவற்றை நான் தான் முடிவு செய்கிறேன். ஆனால், இருவருமே ஆலோசிப்போம். என் மனைவி பயங்கரமாக ப்ராக்டிகலா இருப்பாங்க, நல்ல முடிவுகளை எடுப்பாங்க. 

வீட்டில் பொதுவாக ஆங்கிலம் தான் பேசுவோம். நான் சில நேரம் தமிழும், அவள் சில நேரம் மலையாளமும் பேசுவாள். அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்தால், எல்லாரும் மலையாளம் தான் பேசுவோம். எனக்கு தெரிந்த மலையாளத்தை நான் பேசுவேன், எல்லாரும் அதை பார்த்து சிரித்து விடுவார்கள். விரைவில் முழுமையாக மலையாளம் கற்றுக்கொள்வேன்.

எனக்கு பிடித்த நடிகர் என் அப்பா தான். என் அப்பா, மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். நான் ஒரு வாரிசு நடிகர், அவரோட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எந்த எண்ணத்தையும் வளர்க்கவில்லை. நிறைய பேர் வந்து சொல்வார்கள், ‘அப்பா மாதிரி ஆகணும்’ என்று. ‘நான் என்னை மாதிரி தான் ஆக வேண்டும்’ என்று நினைத்தேன். என்னை மாதிரியே அப்பாவுக்கும் ஆரம்பத்தில் இந்த சிரமம் இருந்தது. தாத்தா மாதிரி வர வேண்டும் என்று அவருக்கு பலர் கூறியுள்ளனர். ஆனால், அவர் அவராக வர முயற்சித்தார். 

கடந்த ஒன்றரை வருடமாக ஸ்கிரிப்ட் செலக்‌ஷனில் ஈடுபட்ட போது, வில்லன் ரோல் வராத என்று தான் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த மாதிரி ரோல் தான் தேவைப்படுகிறது. நான் வில்லனாக இருந்தால், பகத் ஃபாசில் சார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்,’’
என்று அந்த பேட்டியில் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.