தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Madan Patti Rangaraj: வெங்கடேஷ் பட்டிற்கு மாற்று இவனா?…சின்னப் பையனப் போய்.. - வன்ம வசைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்

Madan Patti Rangaraj: வெங்கடேஷ் பட்டிற்கு மாற்று இவனா?…சின்னப் பையனப் போய்.. - வன்ம வசைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்

Apr 29, 2024, 02:22 PM IST

அப்பாவுக்கு சமையல் சம்பந்தமான ஆர்டர் இல்லை என்றால், டிவியில் தாமு சாரின் சமையல் நிகழ்ச்சிகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி இருக்கும் பொழுது, நான் தற்போது ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நான் இணைந்து பங்கேற்கிறேன் என்பதை அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில், வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களுக்கு ரங்கராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ilaiyaraaja: ரஜினி நடிக்கும் ‘கூலி’படத்தில் தனது இசை உரிமைக்காகப் போராடும் இளையராஜா - பதிப்புரிமைச் சட்டம் சொல்வது என்ன?

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த அவர் இது குறித்து பேசினார். அவர் பேசும் போது, “ எனக்கு இது ஒரு புது அனுபவம். சில குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வது மிகவும் பிடிக்கும் அல்லவா...? அந்த குழந்தையைப் போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கற்றுக் கொள்வதற்கு நான் அவ்வளவு ஆவலாக இருக்கிறேன். 

அந்தக் குழுவும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். தாமு சார், அப்பாவின் முன்னுதாரணமாக இருந்தவர். அவருடைய சமையலை, அப்பாவும், அம்மாவும் மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள்

அப்பாவுக்கு சமையல் சம்பந்தமான ஆர்டர் இல்லை என்றால், டிவியில் தாமு சாரின் சமையல் நிகழ்ச்சிகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி இருக்கும் பொழுது, நான் தற்போது ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நான் இணைந்து பங்கேற்கிறேன் என்பதை அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள். 

தாமு சாரும் என்னை ஒரு நண்பராக பாவித்து, குருவாக வழிநடத்துகிறார். நானும் உங்களை போல் அவ்வளவு ஆவலாக இந்த நிகழ்ச்சி எப்படி செல்லும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

நாம் முழுமையாக என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வோம். அதன் பின்னர் மேஜிக் நடக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. 

முதலில் ஒரு உணவை பார்க்கும் போது, அது என்ன மாதிரியான தன்மையை அடைந்திருக்கிறது என்பதை 50 சதவீதம் கணித்து விட முடியும். 10 சதவீதம் வாசனை. மீதம் உள்ளவற்றை ருசித்து பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். முதலில் ஒரு உணவை நம்முடைய கண்கள் 100%  அனுபவிக்க வேண்டும். அதன் பின்னர் நம்முடைய நாக்குக்கு அந்த உணவு செல்லும். அதன் பின்னர் மனம் குளிர வேண்டும். 

பொதுவாக நான் கமெண்டுகளை பெரிதாக கண்டு கொள்வது கிடையாது; காரணம் என்னவென்றால், அந்த கமெண்டை பதிவிடுபவர் அவருடைய அறிவுக்கு என்ன எட்டி இருக்கிறதோ அதனை கமெண்ட் ஆக பதிவிடுவார். 

சோசியல் மீடியாவிற்கு வந்த ஆரம்பத்தில், அனைத்து கமெண்டுகளையும் நான் படித்துப் பார்ப்பேன். அது பாசிட்டிவாகவும் இருக்கலாம்; நெகட்டிவாகவும் இருக்கலாம். நெகட்டிவான கமெண்டுகள் என்னை வருந்தச் செய்திருக்கின்றன. 

அது என்னை தாழ்வான நிலைக்கு எடுத்துச் செல்லும். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அது அவர்களுடைய சுதந்திரம் என்பது புரிந்தது. நான் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பேன். என்னால் நகைச்சுவையை வெளிப்படுத்த முடியுமா?; சின்னப் பையனாக இருக்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நான் என்றைக்குமே யோசித்ததே கிடையாது.  நான் என்னால் என்ன முழுமையாக கொடுக்க முடியுமோ, அதை கொடுப்பேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி