Nepolean: நடிகர் சங்க கட்டிடம்.. நிதியுதவி கொடுத்த நெப்போலியன்.. எவ்வளவு தெரியுமா?
Apr 29, 2024, 03:53 PM IST
Actor Nepolean: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்து உள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமை பெற 40 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து உள்ளார். மேலும் நடிகர் தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல நட்சத்திரங்கள் முன் வந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக, நடிகர் நெப்போலியன் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து உள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க நிர்வாகிகள்:
தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும் பதவி வகித்து வருகின்றனர். இந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பூ, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, சிபிராஜ், லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார், ஸ்ரீமன், ரத்தின சபாபதி, ரத்தினப்பா, எம்.ஏ. பிரகாஷ், வி.கே.வாசுதேவன், ஆர். ஹேமச்சந்திரன், எஸ்.எம்.காளிமுத்து ஆகிய சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள் உள்ளனர்.
முன்னதாக, நடிகர் சங்க தலைவராக 2000 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலான நிர்வாகக்குழு, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்துச்சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அதன்மூலம் வருவாய் ஈட்டி ரூ. 2 கோடிக்கும் அதிகமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்