தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'பிக்பாஸ் வாழ்க்கையவே மாத்திடுச்சு.. அது நாளுக்கு நாள் ஆச்சரியத்த தருது'- மனம் திறந்த விஜய் சேதுபதி

'பிக்பாஸ் வாழ்க்கையவே மாத்திடுச்சு.. அது நாளுக்கு நாள் ஆச்சரியத்த தருது'- மனம் திறந்த விஜய் சேதுபதி

Dec 22, 2024, 12:17 PM IST

google News
பிக்பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையின் அணுகுமுறையையே மாற்றிவிட்டதாக விஜய் சேதுபதி பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையின் அணுகுமுறையையே மாற்றிவிட்டதாக விஜய் சேதுபதி பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையின் அணுகுமுறையையே மாற்றிவிட்டதாக விஜய் சேதுபதி பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது முதன் முறையாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற ஸ்லோகனோடு தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பத்தின் விஜய் சேதுபதி அதிரடி பேச்சால் களைகட்டியது. பின் அது மெல்ல மெல்ல டிஆர்பியில் சரிந்தது. அதை சமாளிக்க எடுக்கப்படட் சில முயற்சிகள் தோல்வியை சந்தித்தாலும் சமீப காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று விறுவிறுப்பாக சென்று வருகிறது.

வாழ்க்கையில் ஒரு அங்கமா மாறிடுச்சி

இந்நிலையில், விடுதலை 2 படக்குழுவினருடன் கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில், "பிக்பாஸ் என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான ஒன்னா மாறிடுச்சு. பிக்பாஸ் கொடுத்த அனுபவம் ரொம்ப பெருசு. அதோட வேலை ரொம்ப அதிகமா இருந்தாலும் அது சொல்லிக் கொடுக்கும் பாடம் அதிகம்.

முதல்ல நான் மறுத்தேன்

என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிய எடுத்து நடத்த சொல்லி சொன்னப்போ நான் முடியாதுன்னு தான் சொன்னேன். இன்னொருத்தர் நடத்திட்டு வர நிகழ்ச்சிய நான் எப்படி எடுத்து நடத்த முடியும்ன்னு நெனச்சேன். ஆனா அந்த ஷோ டைரக்டர் பிரதீப் என்கிட்ட சொல்லும் போது இது உங்க வாழ்க்கைக்கும் புது அனுபவமாக இருக்கும்ன்னு சொன்னாரு.

அதுக்கு அப்புறம் தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்க்க ஆரம்பிச்சேன். அத புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். ஒரு நிகழ்ச்சிய பார்வையாளரா பாக்குறதுக்கும் பார்வையாளர்கிட்டையே பேசுறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும்.

இதை புரிஞ்சிக்க நேரம் எடுத்தது

மக்களை அனுகுவது எப்படி, போட்டியாளர்களை புரிந்து கொள்வது எப்படின்னு எல்லாத்தையும் டைரக்டர் பிரவீன் தான் கத்துக் கொடுத்தாரு. அந்த நிகழ்ச்சிய நான் பாக்குறதுக்கும் அவங்க பாக்குறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். ஒரு வாரம் முழுவதும் நடந்த நிகழ்ச்சியில எது எல்லாம் முக்கியம், எதை பத்தி எல்லாம் கேள்வி கேட்கணும், மக்களோட கோரிக்கைகள் என்ன, நான் போட்டியாளர்கள் கிட்ட எப்படி எல்லாம் பேசனும்ன்னு எல்லாத்துக்குமே ஒரு முறை இருக்கு. இதையெல்லாம் பாத்தப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சில பேர் போகும் போது கஷ்டமா இருக்கும்

சிலபேர் போகும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. முதல் வாரம் ரவீந்தர் வீட்டை விட்டு வெளிய போகும் போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது. அவரு நல்ல போட்டியாளர். அவரை எல்லாம் அனுப்பனுமான்னு எல்லாம் கேட்டேன். அப்போ அவங்க என்கிட்ட மக்களோட வோட்டிங் எல்லாம் காட்டுனாங்க. எந்கிட்ட வேற வழியே இல்லன்னும் சொன்னாங்க.

ஒருகட்டத்துல தான் எனக்கே தெரிஞ்சது என்னையும் இழுந்து அந்த கேம்ல விட்டுட்டாங்கன்னு. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க், அதுல அவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கனும். அதபத்தின டிஸ்கஷன் நடத்தனும்.

மனித மனங்கள் பத்தி தெரிஞ்சது

ஒரு வாரம் ஒரு போட்டியாளர் நல்லா விளையாடி இருப்பாங்க. அடுத்த வாரம் அப்படியே கீழ இறங்கிடுவாங்க. இந்த போட்டியில மனித மனங்களின் ஏற்ற இறக்கங்கள் பத்தி நல்லாவே தெரிஞ்சிக்கலாம்.

நான் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவன். அந்த கூச்சத்த ஒடைச்சது கூத்து பட்டறை. அந்த மாதிரி பிக்பாஸ் வீட்டுக்கு வரவங்களுக்கு 100 நாள் கிடைக்குதுன்னு நெனச்சி சந்தோஷப்பட்டேன்.

பிக்பாஸ், அதுல கிடைக்குற பேர், பணம் எல்லாத்தையும் தாண்டி அவங்களுக்கு கிடைக்குற வாய்ப்பு ரொம்ப பெருசு.

ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் தான்

அங்க இருக்க எல்லாருமே நண்பர்கள் தான். ஆனா டாஸ்க்குன்னு வந்துட்டா எதிரும் புதிருமா இருக்கணும். நேத்து சண்டை போடுவாங்க. இன்னைக்கு அவங்களோட விளையாடனும் இதையெல்லாம் பாக்கும் போது எல்லாம் ரொம்ப ஆர்வமா இருந்தது. இதை எல்லாம் ஒரு அனுபவமாக புரிந்து கொள்ளவது எனக்கு நாளுக்கு நாள் ஆச்சரியமா இருக்கு" என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி