இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?

இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Dec 14, 2024 09:54 PM IST

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?
இதுக்கு முன்ன பிக்பாஸ்ல இப்படி நடந்ததே இல்லையே! புதுசு புதுசா வைக்கப்படும் ஆப்பு.. இந்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?

புது டாஸ்க் புது விமர்சனம்

போதா குறைக்கு நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

எல்லாத்துக்கும் முடிவு

அதற்கு இந்த வாரம் முடிவுகட்ட நினைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதற்காக அவர் இந்த வாரம் எடுத்துள்ள ஆயுதம் தான் டபுள் எவிக்ஷன். பிக்பாஸ் வீட்டில் எந்த ஆராவாரமும் மக்களுக்கு கிடைக்காத நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கே அங்கு இருக்க பிடிக்கவில்லை என்பது அவர்களின் பேச்சிலும் நடத்தைகளிலும் தெரிகிறது.

ஆரம்பத்துலேயே எண்டு கார்டு

அதனால், இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை ரணகளத்துடன் தொடங்கி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. வழக்கமாக வீட்டில் நடக்கும் பஞ்சாயத்துகளை எல்லாம் முடித்துவிட்ட பின் தான் எலிமினேஷன் யார் என்பதை அறிவிப்பார். ஆனால், இந்த முறை போட்டியாளர்களிடம் பேச ஆரம்பித்த உடனேயே வீட்டிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என்ற தகவலுடன் தான் ஆரம்பிக்கிறார். அதற்கான ப்ரோமோவும் வெளியானது.

வீட்டை விட்டு வெளியேறும் சத்யா

அந்த ப்ரோமோவின் அடிப்படையில் பார்த்தால் சத்யா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் ஆள் எனத் தெரிகிறது. காரணம், சத்யா தான் இந்த வீட்டிற்கு தான் வந்த வேலை முடிந்துவிட்டது. இனி இந்த விளையாட்டை விளையாட எனக்கு விருப்பமில்லை என கடுமையாக பேசினார். அவரது வார்த்தைகளை வைத்தே சத்யாவை மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர் என்பது தெரிகிறது.

உடலை மட்டும் வைத்து விளையாட்டா?

கட்டுக்கோப்பான உடலையும் கம்பீரமான தோற்றத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர் சத்யா. தன் மகனுக்காவும் தன் மனைவிக்காகவும் பிக்பாஸ் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுவேன் என வீரமாக பேசிய அவர் செயலில் மிகவும் சொதப்பி தான் வந்தார்.

ஆண்கள் அணிக்காக கொடுக்கப்பட்ட டாஸ்கிலும் சரி, வீட்டில் நடக்கும் பிரச்சனைகளிலும் சரி எதற்கும் அவர் தன்னுடைய குரலை பதிவு செய்தது போன்றே தெரியவில்லை. சொல்லப்போனால், இவர் கேப்டன் ஆனதற்கு பின் தான் பலருக்கும் இவர் வீட்டில் தான் இருந்தார் என சொல்லும் அளவிற்கு தான் இவரது பங்களிப்பு இருந்தது.

டாக்கிங் டாம் சத்யா

அத்துடன் பிக்பாஸ் வீட்டில் திறமையை காட்டாமல் வெறும் உடலை மட்டும் காட்டி வருகிறார் என பலரும் அவரது முன்னாலே பேசினர். விஜய் சேதுபதி கூட அவரது ஆடைகளை விமர்சனம் செய்தார். அதன் பின் தான் அவரது உடைகளில் மாற்றம் ஏற்பட்டது.

மேலும், எந்த போட்டியிலும், பிரச்சனையிலும் தனித்துவத்தை காட்டாத சத்யா வீட்டில் ஒரு டாக்கிங் டாம் ஆகவே இருந்திருக்கிறார் என மக்கள் கிண்டல் செய்து வந்தனர். வீட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்து, நல்ல பேர் வாங்க நினைக்கும் பிள்ளையாக தன்னைக் காட்டிக் கொண்டு வந்தார்.

வெளியேற்றிய மக்கள்

ஆனால், இவர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வேலை முடிந்துவிட்டது. என்னை இப்போது வீட்டை விட்டு வெளியேற்றினாலும் பரவாயில்லை. இதுக்கு மேல் என்னால் விளையாட முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்தனர்.

இதனால், பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருப்பது தெரிந்து விட்டது. அதன்படி முதல் நாளான இன்று சத்யா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.