அத்தனையும் பொய்.. ஆதாரமில்லாத வதந்தி.. பிக்பாஸ் வீட்டை வைத்து நடக்கும் பஞ்சாயத்து..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தீபக் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக நடிகர் சஞ்சீவ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மேனேஜர்- சர்வண்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் சமையல் செய்ய குறைவான ஆட்களை ஒதுக்க வேண்டாம் என்ற தொனியில் தீபக் அதை திறமை சம்பந்தமான வேலை எனக் கூறி இருந்தார்.
மேனேஜர்- லேபர் பிரச்சனை
வீட்டை பெருக்குவது, துடைப்பது போன்ற அடிப்படை வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால் சமையல் அப்படிப்பட்ட வேலை அல்ல. அதனால் அதற்கு ஆட்கள் தேவைப்படும் என்பதே தீபக்கின் கருத்து.
ஆனால், இதை தவறாக புரிந்துகொண்ட அருண். திறமையான வேலை என்பதை எந்த அர்த்தத்தில் கூறினீர்கள்? வேலை செய்யும் சாதாரண நபர் தானே என்ற தொனியில் தான் நீங்கள் இவற்றை எல்லாம் கூறி இருக்கிறீர்கள் என வாதம் செய்தார்.
இதையடுத்து, அருணின் வார்த்தைகளுக்கு பலரும் சமாதானம் கூறியும் அவர் சமாதானம் ஆகவில்லை. அத்துடன், இந்த பஞ்சாயத்தை வாரக் கடைசி வரை கொண்டு வந்தனர்.
விஜய் சேதுபதியின் அட்வைஸ்
சனிக்கிழமை நடந்த வார இறுதி நாள் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதியும் அருணிடம் இதுகுறித்த வாதத்தை முன்வைத்தார். அத்துடன் நில்லாமல் அருணிற்கு தீபக் கூறிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் எப்படி எல்லாமோ விளக்கிப் பார்த்தார். இருந்தும், நான் இந்த வீட்டில் உள்ளவர்களை எல்லாம் என் சொந்த குடும்பமாகத் தான் பார்க்கிறேன். அவர்களில் இப்படி பாகுபாடு காட்டுவது எனக்கு தவறாகத்தான் உள்ளது என பிடிவாதமாகக் கூறினார்.
முடியாத பஞ்சாயத்து
பின், விஜய் சேதுபதிக்காக சமாதானம் ஆனது போல் பேசினாலும், நிகழ்ச்சி முடிந்தும் அன்று இரவு இதுபற்றி பிக்பாஸ் வீட்டில் விவாதித்தார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின்னும், அருண் பேசியதைக் கேட்ட விஜய் சேதுபதி பிக்பாஸ் பேசுவது போல பேசி அறிவுரை கூறினார்.
இது பிக்பாஸ் பார்வையாளர்களிடம் பேசுபொருளான நிலையில், அருணிற்கு ஆதரவாக அர்ச்சனா தனது கருத்தை பதிவு செய்தது பேசுபொருளானது.
ஆதரவுக் குரல் தந்தத சஞ்சீவ்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடி வரும் தீபக்கிற்கு எதிராக ஆதாரம் இல்லாத பொய்கள் பரப்பப்படுகின்றன. வதந்திகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் நம்ப முடியாத அளவிற்கு தீபக் சிறப்பாக விளையாடி வருகிறார்,
ஆதாரமற்ற வதந்திகளால் அவரது பயணத்தை மறைக்க வேண்டாம். தீபக்கிற்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம், பிக்பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து பிரகாசமாக விளையாட வாழ்த்துக்கள். நாம் அவருக்கு அசைக்க முடியாத ஆதரவைக் காட்ட வேண்டும் என நடிகர் சஞ்சீவ் அவரது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தீபக்கிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் கூறியுள்ளார். இவருடன் சேர்ந்து இன்னும் சில பிரபலங்களும் தீபக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்