அரசியல் பேசிய விடுதலை 2.. மக்களை ஈர்த்ததா? ஏமாற்றியதா? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்..
விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) வெளியான படம் விடுதலை 2. இயக்குநர் வெற்றிமாறன் படம் என்பதாலும், இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் என்பதாலும் விடுதலை படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும், பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, படம் மந்தமாக இருப்பதாகத் தெரிய வருகிறது. படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வசூலைக் குவிக்கவில்லை எனத் தெரிகிறது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வெற்றி மாறன் இயக்கிய படம் வெளியான முதல் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ .7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ரூ.6.6 கோடியும், தெலுங்கில் ரூ.40 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கான முன்பதிவு அதிகரித்து இருப்பினும் மீண்டும் வார நாட்களில் வசூல் வேகமாக குறையுமோ என்ற கேள்வியும் எழுகிறது.