தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "இதுல என்னோட கௌரவம் இருக்கு.. இந்தத் தப்ப மட்டும் பண்ணிடாத" சூர்யாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய சிவக்குமார்

"இதுல என்னோட கௌரவம் இருக்கு.. இந்தத் தப்ப மட்டும் பண்ணிடாத" சூர்யாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய சிவக்குமார்

Oct 27, 2024, 03:54 PM IST

google News
சூர்யா அவரது இளமை காலத்தில் செய்த சேட்டைகளை பேசி கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சுவாரசியத்தை கூட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார்.
சூர்யா அவரது இளமை காலத்தில் செய்த சேட்டைகளை பேசி கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சுவாரசியத்தை கூட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார்.

சூர்யா அவரது இளமை காலத்தில் செய்த சேட்டைகளை பேசி கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சுவாரசியத்தை கூட்டியுள்ளார் நடிகர் சிவக்குமார்.

சூர்யா, திஷா பதானி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் பங்கேற்றார். அப்போது, அவர் சூர்யாவின் இளமைக் காலம் குறித்தும் சூர்யா சிவக்குமாரின் கௌரவத்தையே காப்பாற்றியது குறித்தும் சில விஷயங்களைக் கூறி விழா அரங்கையே சுவாரசியமாக்கி இருப்பார்.

சூர்யாவை நிராகரித்த கல்லூரி

நடிகர் சிவக்குமார் பேசுகையில், சூர்யாவை லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கலாம் என எண்ணி அங்கு அட்மிஷன் போடச் சென்றோம். அப்போது சூர்யாவிற்கு அங்கு இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால் நான் போய் கல்லூரியின் பிரின்சிபலை பார்த்து என்ன பிரச்சனை என கேட்டேன்.

அப்போது அவர், சிவாஜி கணேசன் பையன் பி.காம் முடிக்காமல் பாதியிலேயே போய் விட்டார். இன்னும் சில பிரபலங்களின் மகன்களும் அதேபோல் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள். அதேபோலத் தான் உங்கள் பையனும் செய்வார். அதனால் பிரபலங்களுக்கு கல்லூரியில் சீட் இல்லை எனச் சொன்னார்.

மானத்தை காப்பாற்றிய சூர்யா

இதைக் கேட்ட பின், நான் அவரிடம் என்னுடைய பையன் நிச்சயம் பி.காம் முடிப்பான் என்று சொல்லி போராடி சீட் வாங்கினேன். ஆனா கடைசி வருடத்தில் 4 அரியர் வைத்துவிட்டான்.

அப்போது சூர்யாவிடம், டேய் ராஜா என் மானத்தை வாங்கிடாதடா. இதுல என்னோட கௌரவமே இருக்கு, உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் என்னை காப்பாற்று என கெஞ்சினேன். இதைக் கேட்ட சூர்யா எப்போடியோ கஷ்டப்பட்டு படித்து பி.காம் டிகிரி வாங்கிட்டான். அதை வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன் என பெருமையாகக் கூறினார். சிவக்குமாரின் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, தலையில் கைவைத்துக் கொண்டு சிரித்தார்.

கூட்டி பெருக்கும் வேலை செய்த சூர்யா

இதைத் தொடர்ந்து பேசிய சிவக்குமார், டிகிரி முடித்தப் பின் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு கூட்டி பெருக்கி குப்பையை எடுத்துக்கொண்டு போய் வெளியில் கொட்டும் வேலைகளில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தார். அப்போது, அந்த நிறுவனத்தில் ஓனருக்கு சூர்யா சிவக்குமாரின் பையன் என்பதே தெரியாது. பின்னாளில் தான் அதனை தெரிந்து கொண்டனர். அப்படி இருந்த சூர்யா இன்று மக்கள் போற்றும் நபராக மாறியுள்ளார் என பாராட்டினார்.

4 வார்த்தை சேர்ந்து பேச தெரியாது

மேலும் பேசிய அவர், 4 வார்த்தைகள் சேர்ந்து பேச தயங்கும் சூர்யா, தற்போது கங்குவா படத்தில் இணைந்து மிகப்பெரிய மாஸ் காட்டியுள்ளார். அவரது கெரியரில் மிகவும் சிறப்பான படமாக கங்குவா அமையும் என சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கங்குவா

சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்து திரைக்கு வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தான், சூர்யாவின் கெரியரிலேயே அதிக பொருட் செலவில் எடுத்த படம்.

கங்குவா படத்தில் திஷா பதானி கதாநாயகியாகவும், அனிமல் திரைப்படப் புகழ் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி