நடிகர் சிவக்குமார் 83ஆவது பிறந்தநாள்! தமிழ் சினிமாவின் சீரஞ்சீவி! சிவாஜியால் கண்டெடுக்கப்பட்ட ஓவியர்!
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகர் என பல பெருமைகளை கொண்டவர் தான் நடிகர் சிவகுமார். இவருக்கு என தனி அறிமுகம் எதுவும் தேவைபடுவதில்லை.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகர் என பல பெருமைகளை கொண்டவர் தான் நடிகர் சிவகுமார். இவருக்கு என தனி அறிமுகம் எதுவும் தேவைபடுவதில்லை. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர நடிகர் வரிசையில் இருப்பவர்களான நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யாவின் தந்தையும் இவரே. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த நடிகராக சிவக்குமார் இன்று தனது 83ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இருந்து வருகிறார் அவரின் வாழ்வில் குடும்பம் மற்றும் தொழில் என இரண்டிலும் வெற்றி பெற்றவராக இருந்து வருகிறார்.
1965 ஆம் ஆண்டு ஏசி திருலோகச்சந்தரின் 'காக்கும் கரங்கள்' திரைப்படத்தில் சிவகுமார் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'கந்தன் கருணா', 'துணிவே தோழன்' உள்ளிட்ட பிற படங்களில் துணை நடிகராக நடித்தார்.
சிவகுமார் பின்னர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து தற்போது வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரை தொடர்ந்து அடுத்த தலைமுறையான சூர்யா, விஜய், அஜீத் வரை 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமையையும் கொண்டுள்ளார்.