தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Shashi Kapoor Birthday

Shashi Kapoor: விருதுகளின் சொந்தக்காரர் பிறந்த நாள் இன்று

Aarthi V HT Tamil

Mar 18, 2023, 06:20 AM IST

மறைந்த பாலிவுட் நடிகர் சசி கபூர் பிறந்தநாள் இன்று.
மறைந்த பாலிவுட் நடிகர் சசி கபூர் பிறந்தநாள் இன்று.

மறைந்த பாலிவுட் நடிகர் சசி கபூர் பிறந்தநாள் இன்று.

1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி பிறந்தவர், சசி கபூர் பிறந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கடந்த 1940 ஆம் ஆண்டு அறிமுகமானார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Shaitaan OTT: 4 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹாரர் த்ரில்லர்.. ஓடிடிக்கு வரும் சைத்தான்!

Nepolean: நடிகர் சங்க கட்டிடம்.. நிதியுதவி கொடுத்த நெப்போலியன்.. எவ்வளவு தெரியுமா?

Samantha: ரூ.72 லட்சம் ஜாகுவார் முதல் ரூ 2.26 கோடி லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வரை.. சமந்தாவின் ஆடம்பர கார் பட்டியல்

Madan Patti Rangaraj: வெங்கடேஷ் பட்டிற்கு மாற்று இவனா?…சின்னப் பையனப் போய்.. - வன்ம வசைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், ஆக் ஆவாரா ஆகியவை அவருக்கு புகழைப் பெற்று தந்தன. சசி கபூர் 1950 ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில்  பணிபுரிந்துள்ளார். பின்னர் சசி கபூர் 1961 ஆம் ஆண்டு தர்மபுத்ரா திரைப்படத்தின் மூலம் முன்னணி நாயகனாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980 ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதில் தீவார், நமக் ஹலால், காலா ஃபாதர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தன. 

இந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் இவர் தான் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் மன்னாக பார்க்கப்பட்டார்.

அமிதாப் பச்சனை தனது அஜூபாவில் நடிக்குமாறு சசி கபூர் வேண்டுகோள் விடுத்தார். அந்த நேரத்தில் அமிதாப் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை என்றாலும், அவர்களின் நட்பின் காரணமாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆடம்பரமான பட்ஜெட் மற்றும் மெகா ஸ்டார் வரிசையுடன் கூடிய இப்படம், இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், வெளிநாட்டில் வெற்றி பெற்றது.

அவரது வாழ்நாளில் 116 இந்தி படங்களில் நடித்தார். இதில் 61 திரைப்படங்கள் முன்னணி நடிகராகவும், 55 மல்டி ஸ்டார் ஆகவும், 21 படங்களில் துணை நடிகராகவும் மற்றும் ஏழு படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார். தி ஹவுஸ்ஹோல்டர் மற்றும் ஷேக்ஸ்பியர்-வாலா போன்ற படங்களின் மூலம் சர்வதேசத்திற்குச் சென்ற இந்தியாவின் முதல் நடிகர்களில் இவரும் ஒருவர் .

2011 ஆம் ஆண்டு சசி கபூர் இந்திய அரசாங்கத்தால் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷண் பெற்றார். 2015 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார். அவர் தனது பெயருக்கு மூன்று தேசிய விருதுகள் மற்றும் பல பிறநாட்டு விருதுகளைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், 90 ஆவது அகாடமி விருதுகளில் மரணத்திற்குப் பின் கௌரவிக்கப்படும் இரண்டு இந்தியர்கள் ஸ்ரீதேவியுடன் இணைந்து சசி கபூரும் ஒருவர் .

குணால் கபூர், கரண் கபூர் மற்றும் சஞ்சனா கபூர் ஆகிய மூன்று குழந்தைகளுக்கு தந்தையான இவர், நீண்டகால நோய் மற்றும் முதுமை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் டிசம்பர் 4 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு இறந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.