தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனிமை.. புதுவித நோயுடன் அல்லாடும் நடிகை.. என்னப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை- சமந்தா குமுறல்

தனிமை.. புதுவித நோயுடன் அல்லாடும் நடிகை.. என்னப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை- சமந்தா குமுறல்

Oct 21, 2024, 11:36 AM IST

google News
சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

நடிகை சமந்தா, வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ளது சிட்டாடல் ஹனி பன்னி எனும் தொடர். பிரபலமான தி ஃபேமிலி மேன், பார்ஸி வெப் தொடர்களை எடுத்த ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இத்தொடரின் ட்ரெயிலர் வெளியானது. இந்நிலையில், சிட்டாடல் ஹனி பென்னி தொடர் குறித்து இந்தக் குழு கலாட்டா இந்தியா யூடியூப் சேனலில் கலந்துரையாடினர்.

அப்போது நடிகை சமந்தா படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், வலிகளையும் நினைவு கூர்ந்தார்.

மறதியால் பாதிக்கப்பட்ட சமந்தா

சிட்டாடல் ஹனி பன்னி தொடர் எடுத்த சமயத்தில், நான் மையோசிடிஸ் எனும் அறியவகை நோயினால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தேன். இருப்பினும் தலைவலி, மயக்கம் போன்ற அதன் பக்க விளைவுகளை எதிர்கொண்டு தான் இருந்தேன் எனக் கூறியிருந்தார்.

மேலும், மையோசிடிஸில் இருந்து குணமடைந்த நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். அப்போது, படப்பிடிப்பில் என்ன நடக்கிறது. யார் என் அருகில் இருக்கிறார். என் உடன் பணியாற்றிய சக நடிகர்களின் பெயர்களைக் கூட மறந்துவிடுவேன்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை

படப்பிடிப்பின் போது சில நேரங்களில் நான் பாதி மயக்கத்தில் இருப்பேன். அப்போதும் கூட என்னை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இன்னும் சில காட்சிகள் தான் அதை மட்டும் நடித்துவிடுங்கள் என பலரும் கூறினர் என படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை பகிர்ந்துகொண்டார் சமந்தா.

இவற்றை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் என் முன் ஸ்டண்ட் செய்யும் நபர் ஒருவர் இருந்தார், பாதி மயக்கத்தில் இருந்தபோது, எழுத்தாளர் ஒருவர் தான் மருந்துகளை எடுத்துவந்து கொடுத்தார் எனவும் கூறினார்.

அதிரடி உளவாளி

இந்த சிட்டாடல் ஹனி பென்னி திரைப்படத்தில், சமந்தா ஒரு அதிரடி உளவாளியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சமந்தா அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ரிச்சர்ட், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இணையத் தொடர் சிட்டாடல். இதன் அடுத்த பாகமாக சிட்டாடல் ஹன்னி பென்னி உருவாகி வருகிறது. இந்தத் தொடரில் வருண் தவான், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கே.கே.மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் வரும் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டில் ரிலீஸானது. இதன் பின்னர் சமந்தாவின் ஆன் ஸ்கீரின் கம்பேக்குக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அவரது புதிய வெப் சீரிஸ் சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வியாதியால் அவதியுறும் சமந்தா

முன்னதாக, மயோசிடிஸ் என அரிய வகை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, இடையில் சில காலம் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். அவரது கம்பேக் வெப்சீரிஸாக இந்த சிட்டாடல்: ஹனி பன்னி அமைந்திருக்கும் நிலையில் இதன் டீஸரை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து பயர் விட்டு வருகிறார்கள்.

நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பதற்கு முன்னர் சிட்டாடல் சீரிஸில் தான் நடித்து முடித்தார். தன் செட்களில் இருந்து புகைப்படத்தையும், சிட்டாடல் பட இயக்குநர் ராஜ்-டிகே மற்றும் திரைக்கதை ஆசிரியர் சீதா மேனன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உருக்கமான பதிவையும் பகிர்ந்திருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை